இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அபூதர் அவர்கள் ஒரு வியாபாரியாக இருந்தார். அவர்களுக்கென்று அதிக அளவில் சொத்துக்கள் இல்லாவிட்டாலும் வியாபாரத்திற்க்காக தனது ஊரில் இருந்து பல மைல்கள் அப்பால் இருக்கின்ற மக்கா நகருக்கு பல வியாபார பொருட்களை சுமந்து கொண்டு ஒவ்வொரு வாரமும் போவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படி வரும்போதெல்லாம் தனது நெருங்கிய நண்பரும், இஸ்லாத்தின் முக்கிய எதிரியாக திகழ்ந்த அபூஜஹலின் வீட்டில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் அவரின் மக்கா வருகையின் போது அபூஜஹல் அவரை அன்புடன் வரவேற்றாலும் அபூதர்க்கென்று எந்த ஒரு நன்மையையும் செய்தது இல்லை.
ஒரு சமயம் அபூ ஜஹல் தனது நட்பின் காரணமாக அபூதர் அவர்களுக்கு வியாபாரத்திலே உதவி செய்தான்.
ஒரு சமயம் அபூதர் அவர்கள் மக்காவிற்கு வந்த போது எந்த ஒரு வியாபார பொருளையும் எடுத்து வராமல் வெறும் கையுடன் வந்தார். "என்னுடைய அறுமை நண்பர் அபூதர் அவர்களே! வியாபரம் செய்வதை நிறுத்திவிட்டீர்களா? " என்று அபூ ஜஹல் வினவினான்.
இதனைக்கேட்ட அபூதர் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை அபூ ஜஹலும் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறிவிட்டாரோ என்று எண்ணி அவனிடமே கேட்டார். "அபூ ஜஹலே! நீரும் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக ஆகிவிட்டீரா?" என்று.
ஆம்! அதிலே எந்த சந்தேகமும் எனக்கில்லை என்று ஆணித்தரமாக கூறினான் அபு ஜஹல். "முஹம்மது ஒரு நபிதான், அவர் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதர் தான் என்றான், அவர் சிறு வயதிலிருந்தே நல்ல பண்பாளராக இருக்கின்றார். அவரை நம்பாத ஒருவர்கூட இங்கு வசிக்க வில்லை. அவரை ஆரம்ப காலத்தில் நம்பிக்கையாள(அல் அமீன்) என்று தான் அழைப்போம்" என்றான்.
ஒரு வினாடி அமைதிகாத்த அபூஜஹல் கூறினான் "எனக்கு முஹம்மதின் அடிமையாக இருக்க விருப்பமில்லை!" நான் முஸ்லிமாக இங்குள்ள மக்கள் என்னை "முஹம்மதின் அடிமை" என்று அழைப்பார்கள்". என்று கூறினான்.
இதனைக்கேட்ட அபூ ஜஹல் மிகுந்த மனவேதனை அடைந்தான். தனது நெருங்கிய நண்பர் தன்னை விட்டு பிரிந்ததை எண்ணி வருத்தமடைந்தான். அவனது நண்பரை தொடர வேண்டும் என்ற சிறு எண்ணம் அவனுள் இருந்தது.
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனுடைய தூதர் தான் என்பதையும், அவர் வெகு விரைவில் வெற்றி பெறுவார் என்பதையும் நம்பினான். எனினும் அவனிடம் இருந்த அவனது தற்ப்பெறுமை அவனை சிறைபிடித்துக்கொண்டது.
இதுதான் இரு நெருங்கிய நண்பர்கள் பிரிந்து சென்ற வரலாறு. அபூதர் அவர்களோ முஹம்மது(ஸல்) அவர்களை சந்தித்து நம்பிக்கைக்கொண்டார். ஆனால் அபூ ஜஹலோ மற்ற அரபியர்களை ஒன்றுகூட்டி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு எதிராகவும், இஸ்லாத்திற்க்கு எதிராகவும் யுத்தம் செய்ய தொடங்கினான், தான் தோற்க்கடிக்கப்படுவோம் என்று தெரிந்தும்.

"எனக்கு வியாபாரம் செய்து அழுத்துப்போய்விட்டது" என்று நேரடியாகவே பதில் கூறினார் அபூதர்.
அபூஜஹல் : மரணிக்க விரும்புகிறீர்களா?
அபூதர்: வியாபாரம் செய்வதை நிறித்தியதால் நான் ஒன்றும் மரணிக்கவில்லை, மாறாக தூய்மையான இன்பத்தை எதிர்பார்த்தவனாக் இருக்கிறேன்!
அபூஜஹல் : அப்படியென்றால்?
அபூதர்: நான் முஹம்மது(ஸல்) அவர்களை சந்திப்பதற்க்கு ஆவலாக உள்ளேன்!
அபூஜஹல்: அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதையா? ஆச்சரியத்துடன் கேட்டான்.
அபூதர்: அவர் உமது நெருங்கிய உறவினர் ஆயிற்றே?
அபூஜஹல்: உமது எண்ணத்தை நீர் மாற்றிக்கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்!
அபூதர்: அவரை(முஹம்மது) சந்திப்பதை விட்டும் ஏன் என்னை தடுக்குகிறீர்கள்?
அபூஜஹல்: அவரது பேச்சால் நீங்கள் கவரப்பட்டு விடுவீர்களோ என்று நான் அஞ்சுகிறேன், ஏனென்றால் யாரெல்லாம் அவரை போய் சந்தித்தனரோ அவர்கள் அனைவரும் அவரின் வசீகர பேச்சால் கவரப்பட்டு விடுகின்றனர். அவர் அவர்களுக்கு இறை வசனத்தி ஓதிக் காண்பிக்கின்றார். உங்களுக்கும் அதே நிலை ஏற்ப்பட்டுவிடலாம்!.
இதனைக்கேட்ட அபூதர் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை அபூ ஜஹலும் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறிவிட்டாரோ என்று எண்ணி அவனிடமே கேட்டார். "அபூ ஜஹலே! நீரும் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக ஆகிவிட்டீரா?" என்று.
அபூ ஜஹல்: நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்?
அபூதர்: நீர் இதுவரை முஹம்மது(ஸல்) அவர்கள் ஓதிய இறை வசனங்களை காதால் கேட்டதில்லையா?
அபூ ஜஹல்: எல்லாமே உண்மைதான்!
அபூதர்: முஹம்மது(ஸல்) அவர்களுக்கு உண்மையிலேயே இறைவனிடம் இருந்து செய்தி வருகிறது என்பதை நீர் ஏற்றுக்கொண்டீரா?
அபு ஜஹல்: ஆம்! அப்படி இல்லையென்றுச்சொன்னால் அவர் ஒரு சிறந்த மனிதராக திகழ முடியாது!
அபூதர்: முஹம்மது(ஸல்) அவர்கள் ஒரு இறைத்தூதர் தான் என்பதை நீர் நம்புகிறீரா?
ஆம்! அதிலே எந்த சந்தேகமும் எனக்கில்லை என்று ஆணித்தரமாக கூறினான் அபு ஜஹல். "முஹம்மது ஒரு நபிதான், அவர் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதர் தான் என்றான், அவர் சிறு வயதிலிருந்தே நல்ல பண்பாளராக இருக்கின்றார். அவரை நம்பாத ஒருவர்கூட இங்கு வசிக்க வில்லை. அவரை ஆரம்ப காலத்தில் நம்பிக்கையாள(அல் அமீன்) என்று தான் அழைப்போம்" என்றான்.
அபூதர்: பின்னர் ஏன் நீர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை?
அபூஜஹல்: எனக்கு அடிமையாக வாழ விருப்பமில்லை.
அபூதர்: ஆனால் முஹம்மது(ஸல்) அவர்கள் யாரையும் அடிமையாக நடத்துவதில்லையே!
ஒரு வினாடி அமைதிகாத்த அபூஜஹல் கூறினான் "எனக்கு முஹம்மதின் அடிமையாக இருக்க விருப்பமில்லை!" நான் முஸ்லிமாக இங்குள்ள மக்கள் என்னை "முஹம்மதின் அடிமை" என்று அழைப்பார்கள்". என்று கூறினான்.
அபூதர்: நீர் நினைப்பது உண்மையல்ல!
அபூ ஜஹல்: ஆமாம்! நான் சொல்வது உண்மையல்ல!
அபூதர்: நீர் கண்டிப்பாக தோற்ப்பீர்! முஹம்மது(ஸல்) அவர்கள் உண்மையாளராக இருப்பதால் நிச்சயமாக அவர் வெற்றி பெறுவார்!.
அபூ ஜஹல்: நிச்சயமாக முஹம்மது வெற்றி பெறுவார் என்பது எனக்கு தெரியும்! நான் தோற்க்கடிக்கப்படுவேன் என்பதும் எனக்கு நன்றாக தெரியும்!. எனினும் நான் தவறான பாதையிலேயே இருப்பேன்!
அபுதர்: அப்படியென்றால் இன்றிலிருந்து நம்முடைய நட்பை கைவிடுகின்றேன், நான் முஹம்மது(ஸல்) அவர்களை சந்திக்கச்செல்கிறேன், அவருடைய இந்த இஸ்லாமிய பிரச்சாரத்தில் இறுதி வரை அவரோடு செயல்படுவேன், முஹம்மது(ஸல்) அவர்களைப்பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி!.
இதனைக்கேட்ட அபூ ஜஹல் மிகுந்த மனவேதனை அடைந்தான். தனது நெருங்கிய நண்பர் தன்னை விட்டு பிரிந்ததை எண்ணி வருத்தமடைந்தான். அவனது நண்பரை தொடர வேண்டும் என்ற சிறு எண்ணம் அவனுள் இருந்தது.
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனுடைய தூதர் தான் என்பதையும், அவர் வெகு விரைவில் வெற்றி பெறுவார் என்பதையும் நம்பினான். எனினும் அவனிடம் இருந்த அவனது தற்ப்பெறுமை அவனை சிறைபிடித்துக்கொண்டது.
இதுதான் இரு நெருங்கிய நண்பர்கள் பிரிந்து சென்ற வரலாறு. அபூதர் அவர்களோ முஹம்மது(ஸல்) அவர்களை சந்தித்து நம்பிக்கைக்கொண்டார். ஆனால் அபூ ஜஹலோ மற்ற அரபியர்களை ஒன்றுகூட்டி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு எதிராகவும், இஸ்லாத்திற்க்கு எதிராகவும் யுத்தம் செய்ய தொடங்கினான், தான் தோற்க்கடிக்கப்படுவோம் என்று தெரிந்தும்.
0 கருத்துரைகள்:
Post a Comment