புதுவை மற்றும் தமிழகமெங்கும் இன்று துவங்கும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள், பிப்ரவரி மாதம் 28 வரை நடைபெறுகிறது. அச்சமயத்தில் வீடுகளுக்கு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் பொதுமக்களிடம் கேட்கும் 29 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.
அவை: 1. பெயர், 2. குடும்ப தலைவருக்கு உறவு முறை, 3. இனம், 4. பிறந்த தேதி மற்றும் வயது, 5. தற்போதைய திருமண நிலை, 6. திருமணத்தின் போது வயது, 7. மதம், 8. ஷெட்யூல்டு வகுப்பு/ ஷெட்யூல்டு பழங்குடி, 9. மாற்றுத் திறன் (ஊனம்), 10. தாய்மொழி, 11, அறிந்த பிற மொழிகள், 12. எழுத்தறிவு நிலை, 13. கல்வி நிலையம் செல்பவர்களின் நிலை. 14. அதிக பட்ச கல்வி நிலை, 15. கடந்த ஆண்டில் எப்பொழுதாவது வேலை செய்தாரா.
16. பொருளாதார நடவடிக்கையின் வகை, 17. நபரின் தொழில், 18. தொழில், வியாபாரம், சேவையின் தன்மை, 19. வேலை செய்பவரின் வகை, 20. பொருளீட்டா நடவடிக்கை, 21. வேலை தேடுகின்றாரா, வேலை செய்ய தயாரா, 22. பணி செய்யும் இடத்திற்கு பயணம், 23. பிறந்த தேதி, 24. கடைசியாக வசித்த இடம், 25. இடப்பெயர்ச்சிக்கான காரணங்கள், 26. நகரத்தில் இடப்பெயற்சிக்கு பின் வசித்து வரும் காலம், 27.உயிருடன் வாழும் குழந்தைகள், 28. உயிருடன் பிறந்த குழந்தைகள், 29. கடந்த ஓராண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகள்.
மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் இக் கேள்விகளுக்கான பதில்களை முன்னதாகவே தயாராக வைத்திருந்து, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி :இந்நேரம்
0 கருத்துரைகள்:
Post a Comment