மதுரை: தனித்துப் போட்டியிடுவோம், விஜய்காந்துடன் கூட்டணி அமைந்தால் நல்லது, எல்லா எதிர்க் கட்சிகளும் கூட்டாக திமுகவை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்று 'பல குரல் மன்னன்' போல பேசி வரும் மதவாத சங்கபரிவார் பாஜக இப்போது தன்னை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற வேண்டும் என்றால், அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக இடம் பெற வேண்டும் என்று அக் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பங்காரு லட்சுமணன் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பு இந்தியா முழுவதும் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் இருந்து செயல்பட்டதால் மிகபெரிய பிரச்சனையில் சிக்கி தவிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் அரசியல் அணியான பாஜக கட்சியுடன் கூட்டனி வைத்துகொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை . இந்த சூழ்நிலையில் இவர்கள் இப்படி தி.மு.க எதிர்ப்பு என்ற பெயரை கூறி யாரோடாவது ஒட்டி கொள்ளலாம் என்று பார்கிறார்கள்.
NEWS : SINTHIKKAVUM
0 கருத்துரைகள்:
Post a Comment