Wednesday, February 9, 2011

எகிப்து மக்கள் எழுச்சி இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

கெய்ரோ,பிப்:எகிப்தில் நடந்துவரும் சர்வாதிகார அரசுக்கெதிரான மக்கள் எழுச்சி சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு மட்டுமல்ல இஸ்ரேலுக்கும் எதிரானது என முன்னாள் அரபு லீக் தலைவர் க்ளோவிஸ் மக்சூத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் எகிப்து உருவாக்கிய ஒப்பந்தத்திற்கு இது எச்சரிக்கையாகும். பிராந்தியத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராகவும் இந்த மக்கள் எழுச்சி எச்சரிக்கை விடுக்கிறது.

முபாரக்கிற்கு பிறகு யார் அதிகாரத்தில் வரவேண்டுமென்பதை இஸ்ரேல் தீர்மானிக்க முடியாது. சுதந்திரமாக தேர்தல் நடந்தால் சுலைமானுக்கு எவருடைய ஆதரவும் கிடைக்காது. இவ்வாறு மக்சூத் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza