Friday, February 4, 2011

ஆ.ராசா கைதைக் கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

2G அலைவரிசை முறைகேடு தொடர்பாக மத்திய முன்னாள் தகவல் தொடர்புதுறை அமைச்சர் ஆ.ராசாவை சி.பி.ஐ. கைது செய்ததைக் கண்டித்து சமூக சமத்துவ முற்போக்கு வழக்கறிஞர்கள் மன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த மன்றத்தின் அமைப்பாளர் பழனிமுத்து தலைமையில், சி.பி.ஐ.க்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். "சட்டம் படித்த ஆ.ராசாவைக் கைது செய்தது சி.பி.ஐ.யின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை, அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்" என்று ஆர்ப்பாட்டத்தின்போது கோஷம் எழுப்பினர்.

"கல்மாடிக்கு ஒரு நீதி, ஆ.ராசாவுக்கு ஒரு நீதி என்ற வகையில் செயல்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகளின் அலுவலகத்துக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பதாக" இம்மன்றத்தின் அமைப்பாளர் பழனிமுத்து அறிவித்துள்ளார்.
செய்தி:இந்நேரம் 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza