கடந்த புதன்கிழமை (02.02.2011) மேற்குக் கரைப் பிராந்தியத்தில் அத்துமீறிப் புகுந்து பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான வீடுகள்மீது திடீர் தாக்குதல் நடாத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை 14 பலஸ்தீனர்களைக் கைதுசெய்துள்ளது.
இக் கைது நடவடிக்கை குறித்து, 'விசாரணைக்காக இதுவரை காலமும் தேடப்பட்டு வந்த நபர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டிருப்ப'தாக செய்தி வெளியிட்டுள்ள இஸ்ரேலிய வானொலி, அவர்கள் எந்த இடத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டனர் என்ற விபரங்களை வெளியிடவில்லை.
உள்ளூர்வாசிகள் தகவல் அளிக்கையில், அல் கலீல் பிரதேசத்தைச் சேர்ந்த பலஸ்தீனர்கள் இருவர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மற்றும் மூவர் ஜெனினில் உள்ள அகதி முகாமில் இருந்து பலவந்தமாக இழுத்துவரப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர். தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவிப் பலஸ்தீனர்களின் வீடுகளில் அத்துமீறிப் புகுந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை செய்துவரும் அடாவடித்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகப் பிரதேசவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
செய்தி:இந்நேரம்
0 கருத்துரைகள்:
Post a Comment