Friday, February 4, 2011

100 இடங்களில் தெரு முனை பிரசாரம் - ஆர்.எஸ்.எஸ்!

அயோத்தி விவகாரம், காஷ்மீர் மற்றும் பயங்கரவாதம் ஆகிய விஷயங்களை விளக்கி சென்னையில் 100 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக" ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"ஆர்.எஸ்.எஸ். இயக்கம், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், நாடு முழுவதிலும் மக்கள் தொடர்பு இயக்கத்தைத் தொடங்குவது என தீர்மானித்து தொடங்கி உள்ளது. அதன் படி, தமிழ் நாட்டில் வரும் பிப்ரவரி 6-ந் தேதியிலிருந்து 15-ந் தேதி வரை வீடு வீடாகச் சென்று மக்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.

சென்னையில் நாளை(சனிக்கிழமை) 100 இடங்களில், தெரு முனை பிரசாரம் நடைபெற உள்ளது. மக்களுடனான இந்தப் பொதுமக்கள் தொடர்பின் போது, அயோத்தி விவகாரம், காஷ்மீர் மற்றும் பயங்கரவாதம் பற்றிய துண்டு பிரசுரங்கள் மற்றும் புத்தகங்கள் மூலமாக இந்த பிரச்சினைகளைப் பற்றி மக்களுக்கு விளக்க உள்ளோம்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடந்த 85 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தேசத்துக்கு இக்கட்டுகள், இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள் ஏற்பட்ட போதெல்லாம் எவ்வித மத பேதங்களும் இன்றி அனைவருக்கும் தொண்டாற்றி வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
செய்தி:இந்நேரம் 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza