நாளொன்றுக்கு 16 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட பிரம்மாண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அராக் பகுதியில் தொடங்குகிறது ஈரான்.
மத்திய ஈரானில் உள்ள அராக் பகுதியில் ஷாஸந்த் என்னுமிடத்தில் இவ்வாலை அமைந்துள்ளது. வளைகுடாவிலேயே பெரிய ஆலையாக இது அமையும். மேலும் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட அபதான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும் இந்த வாரம் ஈரான் திறக்கிறது.
உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடாக ஈரான் திகழ்கிறது. வல்லரசு நாடுகளின் பல்வேறு தடைகளையும் தாக்குப் பிடிக்க இந்த எண்ணெய் வளமும் அதை ஈரான் பயன்படுத்தும் முறையும்தான் காரணமாக அமைகின்றது என்றால் மிகையில்லை.
கடந்த டிசம்பர் வரை 5 பில்லியன் பேரல்கள் பெட்ரோல் இருப்பாகக் கொண்டிருந்த ஈரான் இப்போது, புதிதாக இந்தப் பெரிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வளைகுடா பகுதியில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளில் மிகப் பெரியது இந்த ஆலைதான். ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயையும், பணிகள் முழுமையாக முடிந்த பிறகு இந்த ஆலை 16 மில்லியன் பேரல் எண்ணெயையும் சுத்திகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment