Sunday, December 5, 2010

அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் - ஈரான்

மனாமா,டிச.5:ஈரான் நம்மீது தாக்குதல் நடத்திவிடுமோ என்ற பயம் அரபு நாடுகளுக்கு தேவையில்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் மனுஷஹர் முத்தகி அறிவித்துள்ளார்.

ஈரான் அண்டை நாடுகளை தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக அண்மையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்துள்ளார் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்.

ஜோர்டானில் நடைபெறும் மேற்காசிய பாதுகாப்பு உச்சிமாநாட்டில் உரை நிகழ்த்தினார் அவர். அண்டை நாடுகளை தாக்குவது என்பது எங்களுடைய கொள்கை அல்ல. வளைகுடா நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும். இப்பிராந்தியத்தில் அந்நியர்கள் தலையிடுவது நலன் பயக்காது என அவர் கருத்து தெரிவித்தார்.

நேற்று முன்தினம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க ரகசிய ஆவணங்களில் ஈரான் வளைகுடா நாடுகளை தாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. ஈரான் இதனை மறுத்து, விக்கிலீக்ஸின் வெளியிட்ட ஆவணங்களின் பின்னணியில் அமெரிக்கா செயல்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்-பாலைவனத் தூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza