புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் தீவிரவாத பயிற்சி முகாம்களை நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் அறிக்கையை தொடர்ந்து பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களையும் இதர நிரபராதிகளையும் நிபந்தனையின்றி விடுதலைச் செய்யவேண்டும் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் கொடூரமான சித்திரவதைகளுக்கு இரையாக்கி கட்டாயப்படுத்தி குற்றங்களை சம்மதிக்க வைத்துள்ளனர். ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளைக் குறித்த தெளிவான அறிவை கொண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதன் மீது வலுவான நடவடிக்கையை எடுக்காதது கவலைக்குரியது என்று எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மிதவாத ஹிந்துத்துவா அணுகுமுறையை கையாளுகிறது. மத்திய உள்துறை அமைச்சரின் அறிக்கையில் உள்ளார்ந்த நேர்மை இருக்குமானால் உடனடி நடவடிக்கை தேவை.இதன் முதல் கட்டமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யவேண்டும் என்று இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹிந்துத்துவா தீவிரவாத மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. போன்சாலா ராணுவ பள்ளிக்கூடம் போன்றவை அதன் கொடூரமான ராணுவ மயமாக்கலுக்கும் உதவியது. இவையெல்லாம் நடந்தது இந்தியா ஒரு ஜனநாயக-மதசார்பற்ற தேசமாக இருக்கும் பொழுதுதான் என்பது துரதிர்ஷ்டவசமானது.
ஜனநாயகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்தான் ஹிந்துத்துவா தீவிரவாதம்.தற்போது தாக்குதல்களை நடத்திய நபர்களுக்கும், அமைப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்புள்ளது.ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பு என்பதற்கு வரலாற்று ரீதியான ஆதாரம் உள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment