ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே இந்துத்துவ தீவிரவாதிகளை தோலுரித்துக் காட்டியதை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்றுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்டின் சேர்மன் கே.எம். ஷரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள், அரசியல் படுகொலைகள் மற்றும் மதக்கலவரங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆல் தூண்டிவிடப்பட்ட இந்துத்துவ தீவிரவாத இயக்கங்களே காரணம் என்பதை கடந்த பல ஆண்டுகளாக பிரசித்திபெற்ற அரசியல் தலைவர்கள், அறிவு ஜீவிகள்,சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இந்த தேசத்திலுள்ள மக்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றனர்.
ஆனால், அரசாங்கமோ அரசியலில் பழிவாங்கப்படுவோம் என்ற பயத்தினாலோ அல்லது மென்மையான இந்துத்துவத்தை நாமும் கடைபிடிக்க வேண்டும் என்ற காரணத்தினாலோ நாட்டின் சமூக ஒற்றுமையை சுக்கு நூறாக்கி வரும் இந்த காவி பயங்கரவாதம் குறித்த புகார்களுக்கு செவிசாய்க்கவில்லை.
காவி பயங்கரவாதத்திற்கு ஒத்து ஊதும் தேசியளவிலான ஊடகங்கள் மற்றும் காவல்துறை, உளவுத்துறையில் உள்ள உயர் அதிகாரிகளின் துணையுடன் ஆர்.எஸ்.எஸ். நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லிம்கள் மீது பழியை சுமத்தியதுடன் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மகிழ்வுடன் கைது செய்து அவர்களை துன்புறுத்தி செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்து சிறைகளில் அடைத்துள்ளனர்.
இந்த தேச விரோத குற்றங்களை காரணம் காட்டி பல காட்டுமிராண்டித்தனமான பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு உட்பட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகள், படுகொலைகள் ஆகியவற்றிற்கு காரண கர்த்தா இந்துத்துவ இயக்கங்கள்தான் என்பதை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு மையம்) கண்டறிந்துள்ளது.
இது விஷயத்தில் தயக்கங்களை களைந்து உள்துறை அமைச்சர் சார்பற்ற மற்றும் உதியான நடவடிக்கைகள் மூலம் இந்துத்துவ தீவிரவாத வலைப்பின்னல்களை அடையாளம் கண்டு போலீஸ் மற்றும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கின்றது. அதே போன்று உளவுத்துறையின் தவறான தகவல்களினால் பல அப் பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலிகடாக்களாக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசு மனமுவந்து ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பதற்கும் பிணை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டு கொள்வதாக அதன் தமிழ் மாநில மக்கள் தொடர்பாளர் அ. ஃபக்ருதீன் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment