ஏர்செல் செல்போன்களில் ரோமிங் கட்டணம் நீக்கப்படுகிறது என அறிவித்துள்ள அந்த நிறுவனம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், “மொபைல் போன் நிறுவனங்களில், நாட்டிலேயே, முதல் நிறுவனமாக, ஏர்செல் நிறுவனம், ரோமிங் கட்டணத்தை நீக்கி உள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.
செல்போன்களில் இருந்து, மாநிலம் விட்டு மாநிலம் பேசும்போது, டயல் செய்பவரும், மறுமுனையில் பேசுபவரும் ரோமிங் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. இப்போது, ஏர்செல் செல்போன்களில் ரோமிங் கட்டணம் நீக்கப்பட்டதன் மூலம், மறுமுனையில் பேசுபவர் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏர்செல் சந்தாதாரர்கள் இதன் மூலம் கூடுதல் பலன் பெறுவார்கள்.
“ஏர்செல் சந்தாதாரர்கள், ‘ஒரு தேசம் ஒரு கட்டணம்’ என்ற திட்டத்தில், ஒரு செகண்டுக்கு ஒரு பைசா என்ற கட்டணத்தில் பேசவும் வகை செய்யப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். கட்டணம் ஒரு ரூபாய் ஆகும்” எனவும், ஏர்செல் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: viruviruppu
source: viruviruppu
0 கருத்துரைகள்:
Post a Comment