நடிகர் கமல் நடித்து இயக்கி தயாரித்துள்ள "விஸ்வருபம்" படம் இஸ்லாமிய மார்கத்திற்கு எதிராக உள்ளதால் உலகமெங்கும் முஸ்லிம்கள் நடிகர் கமல் மேல் கொந்தளிப்பில் உள்ளனர். தமிழ் நாட்டில் இந்த திரைப்படத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருக்க முஸ்லிம் அமைப்புகள் கேட்டு கொண்டதற்கு இணங்க தமிழக அரசு இத்திரை படத்திற்கு 2 வார கால தடை விதித்தது .
மேலும் சில அரபு நாடுகளிலும் இந்த திரை படத்திற்கு தடை விதிகபட்டுளது இதனை தொடர்ந்து மலேசியாவில் இப்படத்தை தடை செய்ய கோரி
24-1-13 அன்று பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல் வீரர்கள் மற்றும் கிம்மா என்ற முஸ்லிம் அமைப்பும் இணைந்து உள்துறை அமைச்சகதை தொடர்பு கொண்டு இப்படத்தில் முஸ்லிம்களை எவ்வாறு அநியாயமாக தீவிரவாதிகளாக சித்தரிக்கபட்டுளத்தை விரிவாக விளக்கினார்கள் .
இதனை தொடர்ந்து மலேசியா உள்துறை அமைச்சகம் அதிரடியாய் செயல் பட்டு விஸ்வருபம் படத்திற்கு தடை விதித்தது ..
இதே போல் விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரளா மாநிலம் கோழிக்கோடு , எர்ணாகுளம் , இடுக்கி , கொல்லம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் படம் திரையிடும் தியேட்டருக்கு முன்பாக கண்டனப் போராட்டங்களை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் விஸ்வரூபம் படம் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
கோழிக்கோடில் நடந்த போராட்டம்
கொல்லத்தில் நடந்த போராட்டம்
எர்ணாகுளத்தில் நடந்த போராட்டம்
பாலக்காட்டில் நடந்த போராட்டம்
பாப்புலர் ஃப்ரண்ட் போராட்டம் பற்றி தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸில் வந்த செய்தி
0 கருத்துரைகள்:
Post a Comment