தஞ்சாவூர்: மசூதி இமாம் மீதும் இன்னபிற முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
கடந்த வாரம் பட்டுக்கோட்டை அண்ணாநகர் மசூதி இமாம் மைதீன் அப்துல் காதர் பிலால் என்பவரையும் மற்றும் அவரது மாமனார் உள்ளிட்டோரையும், பாலா, சிற்றரசு, சிரஞ்ஜீவி உடபட குடிபோதையில் இருந்த 15 பேர் கொண்ட கும்பல் இமாமை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, உருட்டுக் கட்டைகளைக் கொண்டு கடுமையாகத் தாக்கினார்கள். இந்தச் சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் அமைப்பினர் சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் மாவட்டத் தலைவர் கே. அப்துல் பாஸித் ஃபைஜி தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் ஏ. ஆபிருத்தீன் மன்பயி கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலர் என்.ஏ. முகம்மது இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment