சுவீடன் நாட்டு ரயில் ஒன்றை பெண் ஒருவர் திருடிச் சென்றபோது, (ஆம், ரயிலை திருடிச் சென்றார்!) ரயில் போய் மக்கள் குடியிருக்கும் அப்பார்ட்மென்ட் பில்டிங்கில் மோதி இன்று (செவ்வாய்க்கிழமை) விபத்துக்குள்ளானது. ரயிலை திருடிச் சென்ற பெண், ரயிலை சரியாக ஓட்ட தெரியாத காரணத்தாலேயே விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ரயிலை திருடிச் சென்று மோதிய பெண் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைநகர் ஸ்டாக்ஹார்ம் புறநகரப் பகுதியில் நடைபெற்றுள்ளது இந்த சம்பவம்.
சுவீடன் நாட்டு போலீஸார் நடத்திய ஆரம்ப விசாரணைகளில் இருந்து, இந்தப் பெண் எதற்கார ரயிலை திருடினார் என்பது தெளிவாகவில்லை.
அரீவா ரயில்வே நிர்வாகத்தை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் இது தொடர்பாக தெரிவிக்கையில், “குறிப்பிட்ட பெண், எமது ரயில்வே அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணிபுரிகிறார். அவர் எப்படியோ, ரயிலின் சாவிகளை எடுத்துவிட்டார்.
அதன்பின் ரயிலை எப்படி இயக்கி வெளியே கொண்டு சென்றார் என்பது புரியாத புதிராக உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். ரயில் மோதிய அப்பார்ட்மென்ட் பில்டிங்கில் குடியிருந்த யாரும் காயமடையவி்ல்லை” என்றார்.
source: viruviruppu
0 கருத்துரைகள்:
Post a Comment