பத்திரிகை செய்தி
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 தினத்தை பாசிச எதிர்ப்பு தினமாக நாடு முழுவதும் அனுஷ்டிக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முடிவு செய்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டித் தர கோரியும் மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமான குற்றவாளிகளை தண்டிக்க கோரியும் அன்றைய தினம் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா நடத்தப்படும்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட தலைவர்கள் இந்த தர்ணாவில் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் "என்றும் நம் நினையில் பாபரி மஸ்ஜித்" என்ற கருத்தை போஸ்டர் பிரச்சாரம், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களிடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்கள் கொண்டு சேர்ப்பார்கள்.
அயோத்தியில் 463 ஆண்டு கால பழமையான , முஸ்லிம்களின் இறையில்லமான பாபரி மஸ்ஜிதை பாசிஸ இந்துத்வ சக்திகள் இடித்தார்கள். நமது நாட்டின் கொள்கைகளும் , கோட்பாடுகளும் இத்துடன் இடிக்கப்பட்டன மகாத்மா காந்தியின் படுகொலைக்கு பிறகு சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரும் தீவிரவாத தாக்குதல் இதுதான். அன்றைய தினம் உலக சமூகத்தின் முன்னிலையில் நமது நாடு வெட்கி தலைகுனிந்து நின்றது.
முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் பாபரி மஸ்ஜிதை மறக்க மாட்டான். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறோம்.
இப்படிக்கு
மௌலான கலீமுல்லாஹ் சித்தீகி தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ,
டெல்லி.

0 கருத்துரைகள்:
Post a Comment