Wednesday, October 3, 2012

வெள்ளி கிரகத்தில் பனிபடலம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வெள்ளிகிரகம் குறித்து கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த கிரகத்தின் மேற்பரப்பில் பனிபடலம் சூழ்ந்து இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். 

இது வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பில் 125 கி.மீட்டர் தூரத்தில் ஐஸ் போன்று உறைந்து கிடக்கிறது. இதன்மூலம் அங்கு கார்பன்டை ஆக்சைடு வாயு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது ஐஸ் மற்றும் பனிக்கட்டிகளாக உறைந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் பூமியை விட வெள்ளி கிரகத்தில் அதிக குளிர் நிலவுவது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சூரியனின் அருகில் வெள்ளி கிரகம் உள்ளது. இருந்தும் அங்கு பனிபடலம் இருப்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza