புதுடில்லி : .குஜராத்தைச் சேர்ந்த அமித் ஜெத்வா என்பவர் , தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பல உண்மைகள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் ஆவார்.
அச்சட்டத்தில் மூலம் கிர் வனப் பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்ட சுரங்கங்கள் குறித்து தகவல்களைப் பெறுவதற்காகப் பொது நல மனு தாக்கல் செய்து இருந்தார். இதனால் அரசியல்வாதிகள் மற்றும் குண்டர்களது எதிர்ப்பைச் சம்பாதித்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலைமாதம் 20ஆம் தேதி, குஜராத் உயர்நீதிமன்றத்தின் எதிரே அமித் ஜெத்வா சுட்டுக் கொல்லப்பட்டார்.
இக்கொலையில், பா.ஜ.க . நாடாளுமன்ற உறுப்பினர் டினு சோலன்கிக்குத் தொடர்பு இருப்பதாகவும் இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என அமித் ஜெத்வாவின் தந்தை, குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மேலும் இந்த வழக்கை குஜராத் போலீஸ் ஒழுங்காக விசாரிக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.இதையடுத்து, சி.பி.ஐ. வழக்க்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கியுள்ளது.


0 கருத்துரைகள்:
Post a Comment