Monday, October 15, 2012

துபாய் விசா புதிய நடைமுறை! ஸ்மார்ட் போனில் சுலபமாக விண்ணப்பிக்க முடியும்!!


துபாயில் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் இலாகா GDRFA (General Directorate for Residency and Foreigner Affairs), விசா நடைமுறைகளுக்கான ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. விசா நடைமுறைகளுக்காக அலுவலகம் செல்லாமல், போனிலேயே காரியத்தை கச்சிதமாக முடிக்கும் நடைமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய இலவச போன் அப்ளிகேஷன் மூலம், விசா நீடிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். அத்துடன், வழமையான M-Visa சேவைகளை பெற்றுக் கொள்ளவும், விசா தொடர்பான பொதுவான கேள்விகளுக்கு பதில்களை பெற்றுக் கொள்ளவும் முடியும்.


GDRFA தலைவர், மேஜர் ஜெனரல் மொஹமட் அஹ்மத் அல்-மெர்ரி, “இந்த புதிய ஆன்-லைன் போன் சேவையை அறிமுகம் செய்திருப்பதால், இனி விசா நடைமுறைகளை மிக இலகுவாகவும், துரிதமாகவும் செய்துமுடிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நடைமுறையில், வெளிநாட்டவர் ஒருவர் தமது ஸ்மார்ட் போன் மூலம் விசா நீடிப்புக்கு விண்ணப்பித்தால், விசா நீடிப்பு வழங்கப்பட்டு, இரு எஸ்.எம்.எஸ்.கள் அவரது போனுக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் ஒரு எஸ்.எம்.எஸ், விண்ணப்பதாரரின் பெயர் மற்றும், விசா இலக்கத்தை கொண்டிருக்கும். இரண்டாவது எஸ்.எம்.எஸ், பார்-கோட் ஒன்றின் இமேஜை கொண்டிருக்கும்.விமான நிலையம் அல்லது, வேறு எந்த இமிகிரேஷன் சேவையிலும் உள்ள அதிகாரி, இந்த பார்-கோடை என்கோடு செய்தால், விசா விபரங்கள் இருக்கும்!

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza