ஐ.நா பாதுகாப்புச் சபையை சீரமைக்குமாறு துருக்கிய பிரதமர் றஜப் தைய்யிப் அர்துகான் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரிய நெருக்கடிக்கு தீர்வுகாணும் விடயத்தில் ரஷ்யாவும் சீனாவும் தமது வீட்டோவைப் பயன்படுத்தி தொடர்ந்தும் இடையூறு விளைவிப்பதைத் தொடர்ந்தே அவர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஸ்தான்புலில் நடைபெற்ற பத்திரியையாளர் மாநாட்டில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒருவிடயத்தில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கவேண்டி வரும்போது பாதுகாப்புச் சபையின் ஒன்று அல்லது இரண்டு உறுப்பு நாடுகள் கூறுவதை கேட்க காத்திருக்க வேண்டியுள்ளது. இப்படியிருந்தால் சிரியாவின் முடிவு பெரும் அபாயத்திற்குள் தள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு சபை முதல் அனைத்து நிறுவனங்களின் கட்டமைப்புக்களை மாற்றுவதற்கான காலம் கனிந்துவிட்டதெனவும் அவர் கூறினார். பரந்தளவிலான பிரதிநிதித்துவத்தையும் அதிகபட்ச நீதியையும் அதிவினைத்திறனையும் கொண்டதாக ஜ.நா. பாதுகாப்புச் சபை மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்புச் சபையால் சிரியப் பிரச்சினைக்கு உருப்படியான கொள்கையை செயற்படுத்த முடியவில்லை பாதுகாப்புச் சபையை சீர்திருத்தும்போது துருக்கி, பிரெசில், இந்தியா,இந்தோனோசியா போன்ற சக்திமிக்க நாடுகளும் கவனமெடுக்கப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.


0 கருத்துரைகள்:
Post a Comment