Sunday, October 21, 2012

காற்று, நீரைப் பயன்படுத்தி பெட்ரோல் - விஞ்ஞானிகள் சாதனை!


வெறும் காற்றையும்  நீரையும் பயன்படுத்தி வேதிவினைகளின் மூலம் பெட்ரோல் உற்பத்தி செய்து இங்கிலாந்து வேதியியல் பொறியியலாளர்கள் சாதனை செய்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில் சுமார் 5 லிட்டர் பெட்ரோல் வரை அவர்கள் உற்பத்தி செய்துள்ளனர் எனினும் இந்த முறைமை அதிக செலவு பீடிக்கும் வகை என்றும் தெரிவித்துள்ளனர்.

காற்றிலிருக்கும் கார்பன் எனப்படும் கரியை நீரிலிருக்கும் ஹைட்ரஜனுடன் வினை புரியச் செய்து மெத்தனால் எனப்படும் சேர்மத்தைத் தயாரித்த பொறியியலாளர்கள் பின்னர் மெத்தனாலிலிருந்து பெட்ரோலைப் பிரித்து எடுத்துள்ளனர்.

இவ்வகையில் தயாரிக்கப்படும் பெட்ரோல் தூய்மையாக இருக்கும்; மேலும் காற்று மாசுபடுவதை தடுக்க முடியும்ஆனால் இவ்வகை பெட்ரோலின் விலை சாதாரண விலையை விட அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அடுத்த இரண்டாண்டுகளில் இந்த வகையில் பெட்ரோல் உற்பத்தி செய்ய ஆலை ஒன்று அமைத்து நாளொன்றுக்கு 1200 லிட்டர் பெட்ரோல் தயாரிக்கப் போவதாக அந்தப் பொறியியலாளர்கள் கூறியுள்ளனர்.

அதிகரித்தபடியிருக்கும் பெட்ரோலின் விலையை குறைக்க இந்தக் கண்டுபிடிப்பு எந்தவகையிலும் உதவாது என்றாலும், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுங் காலங்களில் இந்த செயற்கை முறை பெட்ரோல் தயாரிப்பைக் கொண்டு காலந்தள்ளவோ, வாகனந்தள்ளவோ முடியும்.

source: inneram

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza