Saturday, October 13, 2012

கீழக்கரையில் 40 ஆண்டுகள் பழமையான மின் கம்பிகளை மாற்ற வேண்டும்: SDPI வலியுறுத்தல்

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(எஸ்டிபிஐ) சார்பில் கீழக்கரையில் நகர் பொதுக்குழு கூட்டம் நடந்தது, நகர் தலைவர் அபுதாகிர் தலைமை வகித்தார். அமைப்பாளர் சுல்த்தான் முன்னிலை வகித்தார், துணைத்தலைவர் அபூபக்கர் சித்திக் வரவேற்றார். 

கீழக்கரை புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் நகராட்சி நிர்வாகம் ஒதுக்கிய இடத்தில் அமைக்கப்படும் மின் கட்டண வசூல் மையத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். 

இந்து பஜாரில் நகராட்சி சார்பில் கட்டண கழிப்பறை அமைக்க வேண்டும். தில்லையேந்தல் ஊராட்சி மக்கள் குறைகளை களைய வார்டு உறுப்பினர்களின் மனுக்களை பரிசீலித்து மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்ல் பரவுவதை தடுக்க நகராட்சி முனைப்பு காட்ட வேண்டும். 

நகரில் அறுந்து விழும் நிலையிலும், மிகத்தாழ்வாக தொங்கும் 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் வயர்களை மழைக்காவலம் துவங்கும் முன் மாற்ற மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 நகர் செயலர் அப்துல்ஹாதி நன்றி கூறினார். செயற்குழு உறுப்பினர்கள் ஹக், யாசின், நதிர், இஸ்மாயில் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza