Saturday, September 22, 2012

கீழக்கரையில் மின்வெட்டை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற SDPI கட்சியினர் உட்பட பொதுமக்கள் 21 பேர் மீது வழக்கு பதிவு!

கீழக்கரை, : கீழக்கரையில், மின்வெட்டை கண்டித்து இரவில் போராட்டம் நடத்த மெழுகுவர்த்தியுடன் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன் அனுமதியின்றி சாலையில் கூடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கீழக்கரை நகரில் காலை 9 மணி முதல் 12 மணி வரையும் மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் வழக்கமாக மின்சப்ளை நிறுத்தப்படும் தற்போது எந்த அறிவிப்பும் செய்யாமல் இரவு 8 மணி முதல் 9 மணி வரையும், 11 முதல் 12 மணி வரையும், நள்ளிரவு 1 மணி முதல் 3 மணி வரையும், அதிகாலை 4 முதல் 6 மணி வரையும், 7 முதல் 8 மணி வரையும் மொத்தம் 14 மணி நேரம் மின்சாரம் தடைபடுகிறது.


அறிவிக்கப்படாத இந்த தொடர் மின்வெட்டால் மாணவர்கள், வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து, பொது மக்கள் மற்றும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியினர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வள்ளல் சீதக்காதி சாலையில், லிட்டரரி கிளப் எதிரே திடீரென கூடினர். கையில் எரியும் மெழுகுவர்த்தியை ஏந்தி போராட்டத்திற்கு தயாராகினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து கீழக் கரை எஸ்.ஐ கார்மேகம், சம்பவ இடத்திற்கு வந்து தமிழ்நாடு முழுவதும் இந்நிலை உள்ளது. அனுமதியின்றி கூடுவது தவறு. கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், முன் அனுமதியின்றி சாலையில் கூடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டியின் நகர் தலைவர் செய்யது அபுதாகிர், பொரு ளாளர் காதர், முகம்மது இபுராகிம், யாசின், பாருக் உள்பட 21 பேர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza