பாரிஸ்:முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்தை பேணும்நோக்கில் முகத்தை மூடும் நிகாபை அணிய தடைவிதித்து உலக முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய நாடுதான் பிரான்சு. மேலும் கல்வி நிலையங்களில், வேலைபார்க்கும் இடங்களில் ஹிஜாபை அணியக் கூடாது என உத்தரவிட்டது அந்நாட்டு அரசு.
ஆனால் அதே பிரான்சில் தற்பொழுது பெண்கள் நிர்வாண கோலத்தில் நடப்பதால் பெரும் சிக்கலை அனுபவித்து வருகிறது. பெண்கள் நிர்வாணமாக நடந்தால் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என பிரான்சு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெயில் காலத்தில் உடலை மறைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும் என்றும், இல்லையெனில் அபராதமோ, சிறைத்தண்டனையோ அனுபவிக்க வேண்டிவரும் என போலீஸ் எச்சரித்துள்ளது.
கோடை கால வெப்பத்தை பொறுக்கமுடியாமல் பிரான்சு நாட்டைச் சார்ந்த குடிமக்களில் சிலர் முழு நிர்வாணமாக கூட சாலையில் நடக்க துவங்கியதை தொடர்ந்து புதிய சட்டத்தை இயற்றும் நிர்பந்தம் பிரான்சு அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
பிறருக்கு எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாத, சமூகத்தில் ஒழுக்கத்தை பேணும் முஸ்லிம் பெண்களின் நிகாபை எதிர்க்கும் பிரான்சு அரசு, சமூக கலாச்சாரத்தையும், ஒழுக்கத்தையும் சீரழிக்கும் ஆபாச உடைகள், நிர்வாண கோலங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக் குறியாகவும் மாறியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment