Thursday, August 2, 2012

போடோ பயங்கரவாதிகளுக்கு அத்வானி பகிரங்க ஆதரவு: சிதம்பரத்தின் மீது பாதிக்கப்பட்டவர்கள் கோபம்!

Advani blames illegal immigration for Assam conflict
கொக்ராஜர்:அஸ்ஸாமில் போடோ பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை பிரிவினைவாதிகளின் குண்டுவெடிப்பும், பாதிக்கப்பட்ட மக்களின் கொந்தளிப்பும் வரவேற்றன.
துப்ரி மாவட்டத்தில் மக்கள் கடும் கோபத்துடன் சிதம்பரத்தை சந்தித்தனர். கோர்பாரா மாவட்டத்தில் உள்ள ஜுகிபாராவில் ராணுவ வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். ஆறு பேருக்கு கடுமையாக காயம் ஏற்பட்டது.
அஸ்ஸாமில் போடோ பயங்கரவாதிகள் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறி வன்முறையில் பலர் பலியானார்கள். லட்சக்கணக்கான மக்கள் புலன்பெயர்ந்துள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும், நிவாரணப் பணிகளையும் ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திங்கள்கிழமை அசாம் தலைநகர் குவாஹாத்தி வந்தார்.

கோக்ரஜார் மற்றும் சிராங் மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை துப்ரி மாவட்டத்தில் உள்ள போர்காண்டா, தக்கிமாரி, லக்கிகான்ஞ்ச் ஆகிய நிவாரண முகாம்களைப் பார்வையிட்டார்.
இதில், லக்கிகான்ஞ்ச் முகாமுக்கு அவர் வந்தபோது, அங்கிருந்த மக்கள், “போடோ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் சட்டவிரோதமாக வைத்துள்ள ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முகாமில் செய்து தரப்படவில்லை என்றும் அங்கிருந்த மக்கள் புகார் கூறினார்.
“கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது” என்று அவர்களிடம் கூறினார் ப.சிதம்பரம்.
90களில் போடோ பயங்கரவாதிகளுடன் மத்திய-மாநில அரசுகள் ஏற்படுத்திய ஒப்பந்தத்திற்கு பிறகு இதுவரை அவர்களிடமிருந்து ஆயுதங்களை கைப்பற்றவில்லை. போடோலாண்ட் டெரிட்டோரியல் கவுன்சிலின் எல்லைக்குள் அடிக்கடி வன்முறை ஏற்படுவதற்கு இதுதான் காரணம் என பெரும்பாலான பெண்கள் அடங்கிய மக்கள் கூட்டம் சிதம்பரத்திடம் முகாமை விட்டு வெளியேறுமாறு கோஷமிட்டனர்.
சிதம்பரத்துடன் அஸ்ஸாம் மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ராக்கிஃபுல் ஹுசைன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றிருந்தனர்.
இதனிடையே, அஸ்ஸாம் கலவரத்திற்கு காரணமான போடோ பிரிவினை வாத பயங்கரவாதிகளுக்கு, ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் சங்க்பரிவாரத்தைச் சார்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி பகிரங்க ஆதரவை தெரிவித்துள்ளார். அஸ்ஸாமில் வகுப்பு வாத கலவரத்தின் பின்னணியில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய சிறுபான்மை குடியேற்றக்காரர்கள் தாம் காரணம் என எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றும் விதமாக குவஹாத்தியில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் எல்.கே.அத்வானி குற்றம் சாட்டினார்.
நான்கு லட்சம் மக்கள் புலன்பெயர காரணமான கலவரம் தொடர்பாக அஸ்ஸாமில் முக்கிய எதிர்கட்சியான அஸ்ஸாம் கனபரிஷத் மெளனம் சாதிக்கும் வேளையில் போடோ பிரிவினைவாத பயங்கரவாதிகளுக்கு எல்.கே.அத்வானி பகிரங்க ஆதரவை தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் கலவரத்தை இனக்கலவரம் என கூற முடியாதாம். காலம் காலமாக வாழ்ந்து வரும் பழங்குடியினத்தவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதே கலவரத்துக்கு முக்கிய காரணமாம் என அத்வானி உளறினார்.
அஸ்ஸாமை கஷ்மீருடன் ஒப்பிட்ட இழவு வீட்டில் ஆதாயம் தேட வந்த அத்வானி, தீவிரவாதம் மூலம் சொந்த நாட்டில் கஷ்மீர் பண்டிட்டுகள் அகதிளாக மாறியுள்ளதாகவும், அதே சூழல் தான் அஸ்ஸாமில் நிலவுவதாகவும், போடோ பயங்கரவாதிகளின் பெயரை சூசகமாக (கஷ்மீர் பண்டிட்டுகளைப் போல போடோ பிரிவினைவாதிகளின் நிலைமை உள்ளதாக) தெரிவித்தார்.
“வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், பழங்குடியினத்தவரின் நிலத்தை அபகரித்து வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில் தம்முடைய இனமே இப்பகுதியில் காணாமல் போய்விடுமோ என அவர்கள் அஞ்சுகின்றனர். இந்த சம்பவம் நம் நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறுவது அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்றமும் இதுபற்றி ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இவ்வளவுக்குப் பிறகும் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. இதனாலேயே இந்தப் பிரச்னை இப்போது பூதாகரமாக உருவெடுத்து உள்ளது.” என மீண்டும் கலவரத்திற்கு தூபம் போடும் வகையில் அத்வானி கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza