Tuesday, July 24, 2012

உ.பி:பரேலியில் கலவரம் – துப்பாக்கிச்சூட்டில் முஸ்லிம் இளைஞர் பலி!

Zari-worker Imran who died of gun shot wounds was buried today in Bareilly
பரேலி(உ.பி):பரேலியில் இரு பிரிவினர் இடையே உருவான கலவரத்தில் துப்பாக்கிச்சூட்டில் முஸ்லிம் இளைஞர் பலியானார்.
மோதலைத் தொடர்ந்து நகரத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வெளியாகும் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்காது என டிவிசனல் கமிஷனர் கே.ராம்மோகன் ராவ் தெரிவித்தார்.
பரேலி ஷஹ்பாத் பகுதியில் ரமலான் நோன்பு திறக்கும் வேளையில் ஹிந்து மதத்தின் கன்வாரியா பிரிவினர்(சிவ பக்தர்கள்) பள்ளிவாசல் அருகில் பாட்டுப்பாடியும், சத்தம் போட்டுக் கொண்டு இருந்துள்ளனர். முஸ்லிம்கள் அவர்களிடம், சத்தத்தை குறைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து தங்களது செயலை தொடர்ந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் உருவாகியுள்ளது.
மோதல் கலவரமாக மாறி அண்மை பகுதிகளில் வேகமாக பரவியது. கன்வாரியா சமூகத்தைச் சார்ந்த கும்பல் ஸப்ஸி மண்டி என்ற பகுதியை தீக்கிரையாக்கியுள்ளனர்.

கலவரத்தைத் தொடர்ந்து போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் முஸ்லிம் இளைஞர் இம்ரான் பலியாகியுள்ளார். சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கல்வீச்சு சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏராளமான இறைச்சிக் கடைகள் கன்வாரியா கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த கும்பல் சாவல் மண்டி பகுதியில் கடைகளை கொள்ளையடித்துள்ளது.
சஞ்சய் நகரில் ஏராளமான ஆட்டோமொபைல் கடைகளும், ஃபோம் கடைகளுக்கு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்க, ஹிந்து கன்வாரியா கும்பல் வன்முறையாட்டத்தில் ஈடுபட்டது. சற்று இடைவெளிகளில் கன்வாரியாக்கள் கும்பல் கும்பலாக வந்து தங்கள் பங்கிற்கு தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.
வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து கன்வாரியா கும்பலை போலீஸ் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தடியடி நடத்தி அவர்களை கலைத்தபொழுது பஸ்கள் மீது கல்வீசி அவர்கள் தாக்கினர். இதனை தொடர்ந்து போலீஸ் ஒதுங்கிக்கொண்டது. ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளான ஸஹமாத்கன்ச், பஜாயா க்ராஸிங், மாடல் டவுன் போன்ற பகுதிகளில் போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது.
மேலும் லத்திசார்ஜ் நடத்தி முஸ்லிம்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக்கொண்டது. இப்பகுதிகளில் அங்குமிங்குமாக சில கல்வீச்சு சம்பவங்கள் நடந்தேறின.
உ.பியில் முஸ்லிம்களின் வாக்குகளை வாங்கி அகிலேஷ்யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் 3-வது சம்பவமாகும்.
தேர்தலின் போது சமாஜ்வாதிக்காக வாக்கு சேகரிக்க வந்த முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம்கள் தாக்கப்படும்பொழுது காணாமல் போய்விட்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza