பெங்களூர்:சங்க்பரிவாரின் அரசியல் பிரிவான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி புரியும் கர்நாடகாவில் கடும் வறட்சியை போக்க அரசு செலவில் மழைக்காக பூஜை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மதசார்பற்ற ஜனநாயக தேசமான இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் மனித சமூகத்தை கற்காலத்திற்கு அழைத்துச் செல்லும் முட்டாள்தனமான ஹிந்துத்துவா கொள்கையை கோட்பாடாக கொண்டுள்ள பா.ஜ.க அரசு 37 ஆயிரம் கோயில்களில் 18.5 கோடி ரூபாய் செலவில் மழைக்காக பூஜை நடத்தப் போகிறதாம். இதுத்தொடர்பான சுற்றறிக்கை கோயில்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ பூஜாரி தெரிவித்துள்ளார்.
கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் மாநிலத்தை பாதித்துள்ளதால் இந்த ஏற்பாடாம்.
ஜூலை 27-ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் வருண பகவானை மகிழ்விக்க சிறப்பு பூஜையை பா.ஜ.க அரசு நடத்தப்போகிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் அனுமதித்துள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.
கர்நாடகாவில் 175 தாலுகாக்களில் 123 தாலுகாக்களிலும் கடுமையான வறட்சி நீடிக்கிறது.மழைப்பெய்ய கோயில்களில் பூஜை நடத்தப்போகும் பா.ஜ.க அரசின் பிற்போக்குத் தனத்தை மதசார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர்களில் ஒருவரான எம்.சி.நானய்யா கடுமையாக விமர்சித்துள்ளார். பூஜைக்காக செலவழிக்கும் 18.5 கோடி ரூபாயை வறட்சி நிவாரண பணிகளுக்கு செலவிடவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜகதீஷ் ஷெட்டார் முதலமைச்சர் பதவியை ஏற்றவுடன் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து மாநில நிவாரணப் பணிகளுக்கு ரூ.2000 கோடி நிதியுதவியை கோரியிருந்தார்
0 கருத்துரைகள்:
Post a Comment