Saturday, February 25, 2012

விண்வெளித்துறை விஞ்ஞானி ரோடம் நரசிம்மா ராஜினாமா!

ISRO scientist Roddam Narasimha
புது டெல்லி:இந்தியாவின் மூத்த விண்வெளி விஞ்ஞானி ரோடம் நரசிம்மா, விண்வெளி ஆராய்ச்சிக் குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்டோர் மீதான நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிகிறது. ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

எனினும் அவரது ராஜிநாமாவை பிரதமர் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அவரிடம் கோரப்பட்டுள்ளது என்று பிரதமர் அலுவலக பொறுப்பை வகிக்கும் இணை அமைச்சர் வி.நாராயண சுவாமி அறிவித்துள்ளார். நரசிம்மா சிறந்த விஞ்ஞானி என்றும், அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் நாராயணசுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

திட்டக்கமிஷன் உறுப்பினர் சி.கே.சதுர்வேதியும், நரசிம்மாவும் அடங்கிய இரண்டு உறுப்பினர்களை கொண்ட ஆய்வு குழு ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் தொடர்பாக பரிசோதனை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. தங்களின் ஆய்வில் தவறு நடைபெற்றிருப்பதாகத் தனக்குத் தெரியவில்லை என்று அவர் முன்னர் கூறியிருந்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza