அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக கொன்று குவித்த சங்க்பரிவார் பயங்கரவாதத்தின் இரத்த வெறியாட்டத்திற்கு தலைமை தாங்கிய மோடி நானாவதி கமிஷன் முன்பு ஆஜராக தேவையில்லை என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மோடியை நேரடியாக விசாரிக்க வேண்டும் என கோரி குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த மனு மீது நீதிபதிகள் அகில் குரைஷி, சோனியா கோகானி ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது.
மோடியை விசாரணைச் செய்யவேண்டும் என நானாவதி கமிஷனுக்கு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இக்கோரிக்கையை கமிஷன் நிராகரித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடினார்கள்.
இனப்படுகொலை தொடர்பாக மோடி நேரடியாக பதிலளிக்கும் சில வினாக்கள் மீதமிருப்பதாக பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால் ஒரு தனிப்பட்ட நபரை விசாரணைச் செய்யக் கோரி கமிஷனுக்கு மூன்றாவது நபர் கோரிக்கை விடுக்க முடியாது என்பது குஜராத் அரசு தரப்பு வாதமாகும். யாரை விசாரிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்ற அதிகாரம் கமிஷனுக்கு உள்ளது என அட்வக்கேட் ஜெனரல் கமல் திரிவேதி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மோடியை விசாரிப்பது தொடர்பான முடிவு எடுக்கும் அதிகாரத்தை கமிஷனுக்கு அளிக்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
குஜராத் இனப்படுகொலை குறித்து விசாரணை செய்ய 2010-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுகுழு மோடியிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தியிருந்தது.

0 கருத்துரைகள்:
Post a Comment