Wednesday, January 18, 2012

ஐரோப்பிய பாராளுமன்ற தலைவராக ஷூல்ஸ் நியமனம்

Martin schulz

பாரிஸ்:ஐரோப்பிய பாராளுமன்றத்தின் புதிய தலைவராக ஜெர்மனியின் சோசியலிச தலைவர் மார்டின் ஷூல்ஸ் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரிட்டனின் நீரஜ் தேவா மற்றும் தியானா வாலிஸ் ஆகியோரை தோற்கடித்து ஷூல்ஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

போலந்து நாட்டின் ஜெஸி புஸெக் தலைவர் பதவியில் இருந்து விலகுவதை தொடர்ந்து ஷூல்ஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வரும் வேளையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைமை பதவிக்கு ஷூல்ஸ் தேர்வுச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza