Wednesday, January 18, 2012

ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் சல்மான் ருஷ்டி பங்கேற்பாரா?

salmanrushdie
ஜெய்ப்பூர்/புதுடெல்லி:ஜனவரி 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடக்கும் இலக்கிய திருவிழாவில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பங்கேற்கமாட்டார் என கருதப்படுகிறது. ஆனால் இதுத்தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.

சல்மான் ருஷ்டியின் வருகை பிரச்சனைகளை உருவாக்கும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் தெரிவித்துள்ளார்.

இலக்கிய திருவிழாவின் முதல் நாள் சல்மான் ருஷ்டி பங்கேற்கமாட்டார் என்றும், அன்றைய தினம் அவர் இந்தியாவில் இருக்கமாட்டார் என்றும் விழா அமைப்பாளர்கள் கூறுகின்றனர். சல்மான் ருஷ்டி இலக்கிய திருவிழாவில் பங்கேற்கபதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில் அவர் விழாவில் கலந்துக்கொள்ளமாட்டார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று கூறுகிறது. இதனைக்குறித்து உள்துறை அமைச்சருடனும், சட்ட அமைச்சருடனும் பேசியதாக முதல்வர் கெலாட் கூறியுள்ளார்.

எதிர்ப்பை புறக்கணித்து ருஷ்டி இலக்கிய திருவிழாவில் பங்கேற்றால் அது விழாவை பெரிதும் பாதிக்கும். ஆனால் ருஷ்டி இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர். அவருக்கு இந்தியா வருவதற்கு விசா தேவையில்லை. ஆகையால் ருஷ்டி இந்தியாவுக்கு வருவதை தடுக்க முடியாது என கெலாட் கூறுகிறார்.

ராஜஸ்தானில் முஸ்லிம் தலைவர்கள் ருஷ்டியை இந்தியாவில் நுழைய அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். 1988-ஆம் ஆண்டு முஸ்லிம்கள் உயிரினும் மேலாக கருதும் முஹம்மது நபியை அவமதிக்கும் விதமாக ‘சாத்தானின் வசனங்கள்’ என்ற பெயரில் நூலை எழுதிய சல்மான் ருஷ்டிக்கு ஈரானின் புரட்சி தலைவர் இமாம் கொமைனி மரணத்தண்டனை ஃபத்வா(மார்க்கத் தீர்ப்பு) வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza