மினா:பரிசுத்தமான ஹஜ்ஜின் முக்கிய கடமையான அரஃபா சங்கமம் இன்று நடைபெறுகிறது. ’ஹஜ் அரஃபாவில் தங்குவதாகும்’ என்ற நபிமொழியின் அந்தஸ்தை உட்கொண்டு அரஃபாவின் மைதானத்தில் பத்தரை சதுர கிலோமீட்டர் விசாலமான பிரதேசத்தில் நம்பிக்கையாளர்களின் மாநாட்டிற்காக 25 லட்சம் ஹாஜிகள் இன்று காலையிலிருந்தே குழுமியுள்ளனர்.
சவூதி உள்பட வளைகுடா நாடுகளைச்சார்ந்த ஹாஜிகளும், பாகிஸ்தானைச்சார்ந்த 90 ஆயிரம் ஹாஜிகளும் மஸாஹிர் என அழைக்கப்படும் மெட்ரோ ரெயில் வழியாக அரஃபாவுக்கு வருகின்றனர். வெள்ளிக்கிழமை முழுவதும் மினாவில் தங்கியிருந்த ஹாஜிகள் ’லப்பைக் அல்லாஹும்மா லப்பைக்..’ என முழங்கியவாறு இன்று மதியம் அரஃபாவில் சங்கமிக்கின்றனர்.
சவூதி க்ராண்ட் முஃப்தி ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் ஆலு ஷேக் நமீரா மஸ்ஜிதில் உரை நிகழ்த்துவார்.ஒரு வருடத்தின் மிகச்சிறந்த தினமாக வர்ணிக்கப்பட்டுள்ள அரஃபா தினத்தில் மகத்துவத்தை உட்கொண்டு சூரியன் அஸ்தமிக்கும் வரை ஹாஜிகள் பிரார்த்தனையிலும், புனித திருக்குர்ஆனை ஓதுவதிலும் ஈடுபடுவார்கள்.
0 கருத்துரைகள்:
Post a Comment