புதுடெல்லி:2002 பிப்ரவரி 27-ஆம் தேதி குஜராத் இனப் படுகொலையின் போது முதல்வர் நரேந்திரமோடி அழைத்த உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் பங்கேற்றார் என்பதை நிரூபிக்கும் தொலைபேசி அழைப்புகள் அடங்கிய ஆவணங்கள் உள்ளன. சஞ்சீவ் பட்டும் பி.பி.சியின் முன்னாள் பிரதிநிதி ஸும்ப்ரான்சு சவ்தரியும் நடத்திய தொலைபேசி உரையாடல்களின் ஆவணம் வெளியாகியுள்ளது.
சஞ்சீவ் பட் மோடி அழைத்த கூட்டத்தில் பங்கேற்றார் என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த ஆவணம் அமைந்துள்ளது. ஸும்ப்ரான்சு சவ்தரி உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாணப்பத்திரத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். ஹிந்துக்களுக்கு அவர்களுடைய கோபத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளவேண்டும் என நரேந்திரமோடி உத்தரவிட்டார் என சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.
சம்பவம் நடந்த தினம் சஞ்சீவ் பட்டுடன் சந்திப்பு நடத்த சவ்தரி அழைத்ததும், திரும்ப அழைத்ததுமான தொலைபேசி உரையாடல் ஆவணங்கள் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. சம்பவம் நிகழ்ந்த மாலை 7.25 மணிக்கு சவ்தரி சஞ்சீவ் பட்டை அழைத்தார்.
தொலைபேசி உரையாடலின் கால அளவு ஒரு நிமிடத்திற்கும் குறைவானதாகும். 8.20 மணிக்கு பட் சவ்தரியை திரும்ப அழைக்கிறார். 8.40-க்கு சவ்தரி பட்டை மீண்டும் அழைத்துள்ளார். இவ்வேளையில் சஞ்சீவ் பட்டின் வீட்டை நோக்கி வருவதாக சவ்தரி குறிப்பிடுகிறார். இவ்வேளையில் இரு தொலைபேசிகளின் சிக்னல் வஸ்தரபூரியில் உள்ள டவரிலிருந்தாகும் என தொலைபேசி உரையாடல்கள் தெரிவிக்கின்றன. பட்டின் வீட்டிலிருந்து சற்று தொலைவில்தான் டவர் அமைந்துள்ளது.
நரேந்திர மோடியின் வீட்டில் நடத்தப்பட்ட கூட்டத்தில் சஞ்சீவ் பட் செல்வதற்கு சற்று முன்பு தாங்கள் இருவரும் சந்திப்பு நடத்தியிருந்தோம் என சவ்தரி சமர்ப்பித்த பிரமாணப்பத்திரம் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.
மோடி அழைத்த கூட்டத்தில் தான் பங்கேற்றேன் என்ற சஞ்சீவ் பட்டின் கூற்றை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு(எஸ்.ஐ.டி) தள்ளுபடிச் செய்திருந்தது. கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளும் சஞ்சீவ் பட் பங்கேற்றதை உறுதிச்செய்யவில்லை என தெரிவித்த எஸ்.ஐ.டி சஞ்சீவ் பட்டை நம்பமுடியாத சாட்சி என கூறியது.
பட் மோடி அழைத்த கூட்டத்திற்கு செல்வதற்கு சற்று முன்பு தான் அவருடன் சந்திப்பை நடத்தினேன் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த சவ்தரியை விசாரணைச்செய்ய கூட எஸ்.ஐ.டி தயாராகவில்லை. சவ்தரி தன்னை முதலில் அழைக்கும்போது தனது பணியாளர்தாம் அதனை எடுத்தார் என பட் கூறுகிறார். உடற்பயிற்சிக்காக வெளியே பட் சென்றிருந்தபோது முதல் அழைப்பு வந்துள்ளது. பின்னர் சஞ்சீவ் பட் சவ்தரியை திரும்ப அழைத்துள்ளார். சந்திப்பதற்கு தான் பட்டின் வீட்டிற்கு வருவதை தெரிவிக்கவே சவ்தரி தொலைபேசியில் அழைத்துள்ளார்.
சவ்தரியுடன் உரையாடும் வேளையில்தான் போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து லேண்ட் ஃபோனில் அழைத்து மோடி அழைத்த கூட்டத்தில் பங்கேற்க உத்தரவு கிடைக்கிறது. இதனைத் தொடர்ந்து சவ்தரியுடன் நடத்திய உரையாடலை உடனடியாக நிறுத்திவிட்டு கூட்டத்தில் பங்கேற்க சென்றதாக சஞ்சீவ் பட் கூறுகிறார்.
“இரவு 9 மணிக்கு நான் பட்டின் வீட்டிற்கு சென்றேன். சஞ்சீவ் பட்டிற்கு கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததால் 9.30 மணிக்கு என்னுடனான சந்திப்பை முடித்துவிட்டு அவசரமாக சென்றார்” என சவ்தரியும் குறிப்பிடுகிறார்.
அமெரிக்காவில் வசித்துவந்த சவ்தரி ஊடகங்களின் வாயிலாக சஞ்சீவ் தான் மோடியின் கூட்டத்தில் பங்கேற்றது தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க இயலாத சூழலில் உள்ளதை அறிந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நண்பர்கள் மூலமாக சஞ்சீவ் பட்டை தொடர்புக்கொள்ள சவ்தரி முயற்சித்துள்ளார். உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதுதான் சவ்தரியின் நோக்கமாகும். நிதீஷ் தியாகி என்ற நண்பர் மூலமாக இ-மெயில் மூலமாக தொடர்பு கொண்ட பிறகு பட்டின் தொலைபேசி எண் உள்பட விபரங்களை தியாகி சவ்தரிக்கு அளித்துள்ளார். ஆதாரம் தர தான் தயார் என சவ்தரி கூறிய சாட்டிங்கின் நகலை நிதீஷ் தியாகி சஞ்சீவ் பட்டிடம் அளித்துள்ளார்.
மே 14-ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த சவ்தரி பின்னர் இவ்விபரங்களை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் சமர்ப்பித்துள்ளார். முந்தைய சந்திப்பிற்கு பிறகு கடந்த 2011 மே மாதம் ஏழாம் தேதி இருவரும் மீண்டும்
0 கருத்துரைகள்:
Post a Comment