Saturday, November 12, 2011

முஸ்லிம் இளைஞர்களை குறிவைக்கும் ஹிந்துத்வா – சி.எல்.சி

ஹைதராபாத்:ஹிந்து தீவிரவாதம் மீதான காங்கிரஸ் அரசின் மிருதுவான போக்குதான் முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு முழு முதற் காரணமாக உள்ளது என்று சிவில் உரிமை கமிட்டியின் பொதுச் செயலாளர் லதீப் முஹம்மது கான் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் பைன்சாவில் எட்டு முஸ்லிம்களை தீயிட்டு கொளுத்தியது மேலும் சமீபத்தில் சித்திபெட்டில் புனித குரான் பிரதிகளை கிழித்து எரிந்தது உட்பட அனைத்து குற்றங்களையும் செய்பவர்கள் இவர்கள்தான். இதனை வைத்தே முஸ்லிம்களின் பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்படுவதற்கு ராஜா சிங் என்பவன்தான் காரணம். மாநில அரசு ராஜா சிங் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது மேலும் அவனுக்கு காங்கிரஸ் துணை நிற்கிறது. ராஜா சிங் வீட்டுக்காவலில் வைப்பதிலிருந்து தப்பிவிட்டான் என்பதே இதற்கு சாட்சி. போலிசும்,மாநில அரசும் முஸ்லிம்களை ஏமாற்றி வருகின்றன.

மேலும் காவல்துறைக்கு ராஜா சிங் எங்கு இருக்கிறான் என்பது நன்றாகவே தெரியுமென்றும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ்-இன் தீவிரவாத பயிற்சி வெளிப்படையாக ஆந்திராவில் நடைபெறுகிறது என்றும் முஸ்லிம்களை கொல்ல ஆர்.எஸ்.எஸ்ஸும் அதனுடைய சாகாக்களும் ஹிந்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது போன்ற தீவிரவாதிகளை தடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza