Thursday, November 10, 2011

ஆன்மீக வறுமைக்கோட்டின் கீழ் கிலாபத் கோட்பாட்டுச் சிந்தனை

OurUmmah: முஸ்லிம்களின் கிலாபத் கோட்டையை வீழ்த்த நினைப்பவன் நிச்சயமாக இஸ்லாமிய எதிரியாகத்தான் இருக்க முடியும். ஆனால் நாம் ஏன் வீழ்ந்தோம் என்று சுய விசாரணை செய்யவும் அதன் பாரதூரத்தை மதிப்பீடு செய்யவும் நமது சமூதாயம் மறந்துவிட்டதோ என்று சொல்லுமளவுக்கு எம் நிலைப்பாடு உள்ளது.

கிலாபத்தின் வீழ்ச்சி என்பது வீழ்ச்சி அல்ல எழுவதற்கான பயிற்சியே. இஸ்லாத்தின் எதிரிகளின் பலம் பலவீனம் இவற்றை கண்டறிய வரலாறு போதும். ஆனால் முஸ்லிம்களின் பலம் பலவீனத்தை அறிய ஈமானும் ,அல் குர்ஆன் சுன்னாவின் நிழலில் ஏற்படும் ஒற்றுமை எனும் சங்கமம்தான் தேவையாக உள்ளது.

ஒரு முனையில் ஆன்மீக வறுமை முஸ்லிம்களை வாட்டிகொண்டிருக்க மறுமுனையில் பௌதீக சூழல் பலமாக நம்மை தாக்க எதிரிகளைபற்றிய ஆழ்ந்த வாசிப்புக்கு முன், எதிர்க்கப்படும் முஸ்லிம் சமூக பரம்பலில் ஏற்பட்ட கோளாறுகள் பற்றிய மீள்வாசிப்பு காலத்தின் தேவையாகவுள்ளது.அன்று இஸ்லாத்திற்கு பலதுருவ எதிர்ப்பு இருந்துவந்ததை வரலாறு நெடுகிலும் காணலாம். ஆனால் இன்று இஸ்லாமிய எதிர்ப்பு உலகம் ஒருதுருவமாகவும் இஸ்லாமிய உம்மத் பலதுருவங்களாகவும் உலக வரைபடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மறுஉலக சிந்தனை சிதறியடிக்கபட்டு சடவாத கோட்பாடுகளில் முஸ்லிம் உம்மத் தன்னைத்தானே அமிழ்த்தியுள்ளது.

டியூநிசியா ,எகிப்து ,லிபியா நாட்டு மக்கள் எழுச்சி மிக்கவர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர், அரசன் ஆளுவது முக்கியமல்ல ஆளப்படும் மக்கள் தெளிவாக இருக்கின்றார்களா என்பதுதான் முக்கியம் என்ற பாடம் நமக்கு இதில் கிடைத்துள்ளது மழை வெயில் பாராது பசி பட்டினி உணராது கொதித்தெழுந்து ஆர்பாட்டம் பண்ணிய மக்கள் தாம் கொண்ட கொள்கை நிறைவேறவில்லை என்றால் வீடு திரும்புவார்களா என்ன ?

புரட்சி இல்லாத சமூதாயம் பலதரப்பட்ட வரட்சிக்கு வித்திடும் என்பது எழுதப்படாத உண்மை, எதிர் ஆர்பாட்டம் என்பது ஜனநாயக உரிமை என்பதைகூட தெரியாத அளவுக்கு மத்தியகிழக்கு மக்கள் அடக்கி ஆளப்பட்டுவந்தனர் மக்களின் சொத்துக்களை சூறையாடி நாட்டின் வளங்களை காவுகொண்ட அரக்கர்கள் அல்லாஹ்வுக்கு கொஞ்சம் கூட பயப்படாத கொடுங்கோலர்கள் என்பதை மக்களின் கோபம் காட்டிதந்தது டியூனிசியாவில் ஏற்பட்ட அதிர்வு பிராந்திய அரசியல் மாற்றத்தில் கனதியான வகிபாகம் கொண்டுள்ளது என்பதில் ஐயம் இல்லை.

தமது சொந்த நாட்டின் சியோனிச,முதலாளித்துவ ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதம் தூக்கிய இஸ்லாமிய விடுதலை இயக்கங்கள் தீவிரவாதிகளாக மீடியாக்களில் மேற்கத்தைய நாடுகள் சித்தரிப்பது உலகறிந்த விடயம் அதற்கு அரபு நாட்டு சர்வாதிகார அரசியல் மேற்கின் ஆதரவுடன் கணிசமான பங்களிப்பை கொடுத்து வந்ததை எவரும் மறுக்க முடியாது ,மேற்கின் நச்சுக்கருத்துக்களை ஊடகமயப்படுத்த ஊடகஅனுசரணையை வாரி வழங்கிய பெருமை அரபுநாட்டு அரசியல் தலலைமைக்கே சாரும் கிளர்ச்சியாளர்கள் ,புரட்சியாளர்கள் ,சாத்வீக வழி மற்றும் அகிம்சைவழி போராளிகள் எத்தனையோ ஆயிரம்பேர் விசாரணை இன்றி ,விசாரணை கமிஷன் இன்றி சிறைவைக்கபட்டிருக்கும் அவல நிலை சர்வாதிகார அரபுலகில் அரன்கேரியதென்பதை எழுத பேனா முனைகூட வளைந்துகொடுக்க மருத்துநிற்கிறது .

இஸ்லாதிற்கெதிராக அதிக நூல் எழுதப்படும் நாடாக எகிப்து நாடு இருக்கும்படி மேற்கு பார்த்துகொண்டது . இது முஸ்லிம்களின் வரலாற்றில் கருப்பு அத்தியாயமாகவும், மக்கள் மனதில் மாறாத மறுவாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நபி ஸல் அவர்களை கேலிச் சித்திரம் வரைந்து மா நபியின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்த முனையும் மேற்கத்தய அரசியல், யூதர்கலுக்கு உலகில் அனுதாப அலையை ஏற்படுத்த பொய்யாக புணையப்பட “ஹோலோகோஸ்ட்” நூல்கள் பற்றி அரபு நாடுகளில் கூட எழுத தடையாக இருந்துவந்த வேதனை சுமந்த வரலாறு சர்வாதிகார அடக்குமுறையின் கீழ் நடந்தேறியதை காணமுடிந்தது, இன்று மத்திய கிழக்கு நாடுகள் வருடா வருடம் சுதந்திரதினம் அறிவித்துகொண்டாடினாலும் மேற்கத்திய மறைமுக காலனித்துவத்தின் கீழ் அடக்கி ஆளப்பட்டு வருவதை தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது. அன்று நாடுகளுக்குள் நுழைந்து ஏற்படுத்திய காலனித்துவம் இன்று சிந்தனைக் காலணித்துவமாக பரிணாமம் அடைந்துள்ளதே தவிர காலணித்துவம் ஒளிந்து ஓயவில்லை என்பது தெளிவு.

காலனித்துவம் உலகமயமாக்கள் எனும் பெயரில் பொருளாதாரத்தில் மட்டுமல்ல கல்வி ,கலாசாரம் , அஹ்லாக் போன்ற இன்னோரன்ன விடயங்களிலெல்லாம் புரையோடியுள்ளதை முஸ்லிம் நாடுகளில் காண முடிகிறது. இன்று மத்தியகிழக்கில் மாற்றம் கொண்டுவரும்பணி முடுக்கிவிடப்பட்டு சர்வாதிகாரத்தின் அயோக்கிய அரசியல் சண்டித்தனதிற்கு இரத்தம் சிந்திய ,சிந்தாத புரட்சி இத்தொடர்கதைக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது எனலாம்.

நான் எகிப்தில் இருக்கும்போது பலவிடயத்தில் எகிப்தியர்களுடன் அடிக்கடி பேசுவேன் அதில் ஒன்றுதான் அரசியல் விழிப்புணர்வு பற்றியது ஆறாம் விரலாய் சிகரெட் ஏந்திய உங்கள் கைகள் ஏலாம் அறிவாய் ஏன் புரட்சியை மனதில்கூட கொள்ளக்கூடாது ?என்று வினா எழுப்புவேன்.

ஐரோப்பாவில் அவசியமில்லாத சாராயத் தட்டுப்பாடு என்றாலே நாட்டு மக்கள் வேளை நிறுத்தம் பகிஷ்கரிப்பு ,அரச எதிர்ப்பு என்று கிளம்பி விடுவர் புரட்சி ஈன்றெடுத்த மண்னின் மைந்தர்கள் அடிப்படை உரிமை இன்றி பல தசாப்தங்கள் அடக்கி ஆளப்பட்டுவந்துள்ளனர் இம்மக்கள் யாரடா அது? என்று கேட்டால் ஐந்துவருடம் சிறை .எதற்கடா இது? என்றால் இரண்டு வருடம் வனவாசம். இப்படி எகிப்திய மக்கள் சுதந்திர குரல்வளை நசுக்கப்பட்டு இருந்த அந்த கால கட்டத்தில் அரசியல் யாரும் யாருடனும் பேச பயப்படும் வேளை நான் ரகசியமாக அடிக்கடி பேசுவேன்.
மக்களால் மக்களை மக்கள் ஆளும் ஆட்சி மக்களாட்சி, ஜனநாயக ஆட்சி என்று சொல்வர் அரச பீடத்தின் வெற்றிடம் அடைக்கபடுவது மாத்திரம் இஸ்லாத்தின் குறிக்கோள் அல்ல, ஆளப்படும் மக்களின் நிலை ,ஆன்மீக நகர்வு ,கல்வி பொருளாதார சிந்தனை என்பனவற்றின் வகிபாகம் ஆளப்படும் தரப்புக்கு மிகமுக்கியமானதாகும்.

ஜனநாயகம் என்பது இஸ்லாத்தின் எல்லைகளை மீராதவரைக்கும் ஏற்றுகொள்ளதக்கதுதான் ,ஜனநாயகம் என்பது எமது இலக்கு அல்ல ,ஜனநாயகத்தின் ஊடாக கிலாபத் என்பதுவே சமகாலத்தின் அரசியல் சிந்தனை. இது வரலாற்றை மீள்வாசிப்புக்கு உட்படுத்தும்போதும் கடந்தகால கசப்பான கிலாபத் வீழ்ச்சியின் காரணிகளையும் ஒருசேர நோக்கும்போதும் கிடைக்கும் நடைமுறை சாத்தியமான முறையாகும் .

துருக்கிய உமையா ஆட்சியின் வீழ்ச்சிக் காரணிகள் என்ன ?

இஸ்லாமிய நாடுகள் நவீன அதாத்துர்கள் கைகளில் சிக்கி சின்னா பின்னமாகி உள்ளமைக்கு காரணம் என்ன ? இஸ்லாமிய உம்மதுக்கும் கிலாபதுக்குமான தூரம் என்ன ? இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகான எதிரிபற்றிய வாசிப்பு ஒருபக்கம் இருக்க இஸ்லாமிய உம்மத் பற்றிய சுயவிசாரனை காலத்தின் தேவையாக உள்ளது இஸ்லாமிய உம்மதுக்கும் கிலாபதுக்குமான தூரம் எளிமையான தூரம்தான் ஈமானுக்கும் இஸ்லாமிய உம்மதுக்கும் உள்ள தூரம்தான் சமகால இஸ்லாமிய உம்மதுக்கும் கிலாபதுக்கும் உள்ள தூரம் ஈமானின் பக்கம் மக்கள் அண்மிக்க அண்மிக்க கிலாபத்தின் இடைவெளி தூரத்தை மக்கள் குறைக்கின்றனர் ஈமானைவிட்டு தூரம் செல்ல செல்ல கிலாபத்தின் தூரம் நீட்சி கண்டுகொண்டே இருக்கும் ஐன்ஸ்டீனின் நேரயாத்திரைகொள்கை இந்த இடத்திலாவது கொஞ்சமாவது பொருந்தும் என்று நினைக்கிறேன்.

ஒளிவேகத்தில் பூமியை சுற்றிவரும்போது தனது முதிர்ச்சியை குறைத்துக்கொள்ள முடியும் என்ற ஐன்ஸ்டீனின் கொள்கை அந்த இடத்தில் பொருந்தாவிட்டாலும்,மக்கள் ஆன்மீக நகர்வுகளில் காட்டும் வேகத்துக்கு ஏற்ப கிலாபத்தை அடையும் வேகம் சாத்தியமாகும் என்பதை உணர்த்தி நிற்கிறது.அத்துடன் நிர்வாக ரீதியான ஒழுங்கமைக்கப்பட்ட புதிய உலக ஒழுங்கிலும் மக்கள் உள்வாங்கப்படுவதும் முக்கியமாகும் .

மக்களில் ஏற்படும் மனமாற்றம் இயற்கையானது மாற்றத்துக்கு எடுத்துகொள்ளும் விடயதானம் பொறுத்தே சாத்திய நிலையும் அசாத்திய நிலையும் தங்கி உள்ளது மக்களில் ஈமானின் அடியாய் ஏற்பட்ட ஆன்மீக உயர்வு கிலாபதுக்கு வித்திடும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமின்றி சொல்ல முடியும் .இவ்வாறான முக்கிய அமானிதத்தை பொறுப்பேற்கும் தரப்பு அமாநிதத்தை தாங்கிகொள்ளும் அளவுக்கு ஆன்மீக லவ்ஹீக வளம் பெற்றுள்ளதா என்பதை இஸ்லாமிய உம்மத் சிந்திக்க கடமை பட்டுள்ளது.

சாதாரணம் உலக விடயத்தில் கூட ஒரு அலுவலக பதவியை பெற்றுகொள்ளும் நபர் அந்த பதவிக்கு தகுதிகாண் பரீட்சைக்கு தோற்றவேண்டிய கட்டாயம் இருக்கும்பொழுது முழு உலகத்தையும் ஆளும் ,நிர்வகிக்கும் தரப்பு எப்படியான பயிற்றுவிப்பு பெற்றிருக்க வேண்டும் என்பதை நாம் ஒருபக்கம் சிந்தித்தாலும் அல்லாஹ்வின் நியதி எப்படி என்பதை கீழ் வரும் விடயத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும் .

அல்லாஹ் கிலாபத்தை யாரிடம் ஒப்படைக்க நாடுகிறானோ அப்படியான மக்களிடம் முக்கிய பண்புகளை எதிர்பார்கின்றான் ஒன்று :அல்லாஹ்வுக்கும் ,நபி (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்படும் சமுதாயம் இரண்டு :நம்பிக்கை கொள்வது மட்டுமின்றி நல்ல அமல்கள் புரியும் மக்கள் மூன்று: அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு எந்த ஒன்றையும் இணை வைக்காத,அத்துடன் செய்யும் அமல்களை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையில் ஒழுகும் சமூதாயம்.

மேலே நான் சொன்ன விடயங்களை உள்வாங்கிய சமுதாயம்தான் அல்லாஹ் தான் கிலாபத்தை கொடுப்பதாக வாக்களித்த சமுதாயமாகும் அல்லாஹ்விடம் கிலாபத்தை எதிர்பார்க்கும் சமுதாயம் அல்லாஹ் தம்மிடம் எதிர்பார்க்கும் பண்புகள் கொண்டுள்ளனவா என்று தம்மை மீள்வாசிப்புக்கு உட்படுத்தும் கட்டாய தேவையில் உள்ளதை மறுக்க முடியாது. இதோ நான் மேலே குறிப்பிட்ட அந்த சமுதாயம் பற்றி அல்லாஹ் அன்நூர் என்ற அத்தியாத்தில் சொல்லிக்காட்டுகிறான்.

54- அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!” எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.

55- அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித் துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.(அந்நூர் 54-55)

மேலே நாம் குறிப்பிட்ட இரண்டு ஆயத்துகளையும் நன்றாக வாசியுங்கள் .54 வது ஆயத் அல் குர்ஆன் சுன்னாவில் மக்களை அழையுங்கள் என்று சொல்கிறது அப்படி வருகின்ற சமுதாயத்துக்கு அல்லாஹ் பிரதிபலனாக 55 வது ஆயத்தில் ஆட்சியையும் ,அச்சமின்மையையும் ஏற்படுத்துவதாகவும் வாக்களித்துள்ளான்.

மேலே நாம் குறிப்பிட்ட அனைத்து நிபந்தனைகளையும் உள்ளடக்கிய சமுதாயமாக மக்கள் ஒன்று சேரும்போது கிலாபத் அந்த ஒற்றுமையில் சங்கமமாகும் என்பதில் சந்தேகம் இல்லை .இப்படியான சமுதாயத்துக்கே அல்லாஹ் உலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தருவதாக முன்னறிவிப்பு செய்துள்ளான் .

மேலே நாம் குறிப்பிட்டஅல்லாஹ்வின் கட்டளையை மிகக்கவனமாக நோக்கும்போது இன்னுமொரு முக்கியமான அதிகம் மக்களால் பேசப்படாத விடயத்தை கவனிக்க முடிகிறது.

54- அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!” எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.

அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுபடுவதுபற்றி மக்களுக்கு எடுத்துச்சொல்லும் பொறுப்பில் எத்திவைப்பதே அழைப்பாலனின் கடமை அதை ஏற்றுகொள்ளாத மக்கள் நஷ்டவாளியாகுவதில் அழைபாலனுக்கு பங்கில்லை . அதேநேரம் ஆன்மீக மாற்றத்தில் மக்கள் தெளிவுகள் தமக்கு கிடைத்தபின்பும் மறுப்பார்கள் என்றால் அது மக்களின் குற்றமே ,
மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை(அர்ரஅத் 11)
மேலே அல்லாஹ் சொல்லிகாட்டும் அடிப்படையில் மக்கள் தாமாக மாறாதவரை அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை என்பதிலிருந்து மக்களின் மாற்றம் சமந்தபட்டவிடயத்தில மூன்று தரப்பினர் சம்மந்தப்படுகின்றனர்.

முதலாம் தரப்பு : மாற்றத்துக்கான தெய்வீக சிந்தனை (அல் குர்ஆன் சுன்னா)

இரண்டாம் தரப்பு: சிந்தனையை மக்கள் மயப்படுத்தும் தரப்பு (அழைப்பாளர்கள்)

மூன்றாம் தரப்பு : அழைப்புக்கு உள்வாங்கப்படும் சமுதாயம்

அல்லாஹ்விடம் கிலாபத்தை எதிர்பார்க்கும் சமுதாயம் அல்லாஹ் தம்மிடம் எதிர்பார்க்கும் பண்புகள் கொண்டுள்ளனவா ?என்று தம்மை மீள்வாசிப்புக்கு உட்படுத்தும் கட்டாய தேவையில் உள்ளதை மறுக்க முடியாது. இதையே நான் மேலே குறிப்பிட்ட அந்த சமுதாயம் பற்றி அல்லாஹ் அன்நூர் என்ற அத்தியாத்தில் சொல்லிகாட்டுகிறான்.

மேலே கூறப்பட்ட முத்தரப்பு சம்மந்தப்பட்ட காரணிகளை வாசிக்கும்போது மக்கள் சீர்திருத்தம் .சமூதாய மாற்றம் என்பன தெய்வீக சிந்தனையில் இருந்து கிடைக்கும் வழிகாட்டல் மூலம் என்றபோதும் மாற்றம் என்பது மக்கள் கையில் கொடுக்கப்பட்ட ஒன்றாகவே நோக்க முடிகிறது மக்கள் தமக்கு கிடைத்த நல்லுபதேசங்களை கொண்டு தாமே தமது ஈமானின் பல வீனதை கண்டறிந்து மாற்றத்துக்கான முயற்சியில் அக்கறை காட்டவேண்டும் என்று விளங்க முடிகிறது.

ஆன்மீக மாற்றத்த்தை ஏற்படுத்த மூன்று தரப்பு இருப்பதுபோல ஆட்சி மாற்றத்தில் அப்படியான மூன்று தரப்பு இருப்பதாக காணமுடியவில்லை
ஆட்சி உருவாக்கம் பெற்று அது மக்களில் வேரூன்றி நிலைத்து நிற்க நேரடியாக அல்லாஹ்வே சம்மந்தப்படுவதையே அதிகமான அல் குர்ஆன் வாசனங்கள் எடுத்துக்காட்டுகின்றன, இது அல்லாஹ்விடத்தில் கிலாபத்துக்கு இருக்கும் முக்கியத்துவத்தை எடுத்து காட்டுவதையே எமது புலனுக்கு உணரச்செய்கிறது.

ஆட்சி கிடைப்பதென்பது வேறு அது நிலைத்து நிற்க கொடுக்கப்படும் ஆட்சி முறை வேறு தற்காலிகமாக கிடைக்கும் ஆட்சி முறைகளில் அதிக கவனம் கொடுப்பதைவிட நிரந்தரமான நீண்டகால திட்டத்தின் கீழ் வரும் ஆட்சியே மிக முக்கியவிடயமாகும்.

55- அவர்களுக்கு முன் சென்றோ ருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித் துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.(அந்நூர் 54-55).

“அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்” என்று கூறுவீராக!(ஆளு இம்ரான் 26).

அல்லாஹ் நேரடியாக கொடுக்கும் ஆட்சி நிரந்தர திட்டமிடல்கொண்ட ஆட்சியேயாகும் என்பதையே மேல்குறிப்பிட்ட அல் குர்ஆன் வசனங்கள் தெளிவு படுத்துகின்றன .

மேலும் ஆட்சியை அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு கொடுப்பதாகவும் ,விரும்பியவரிடமிருந்து எடுத்துகொள்வதாகவும் சொல்கின்றான், இதை அழகிய முறையில் விளங்க அல்லாஹ் கிலாபத்தை யாருக்கு கொடுகின்றானோ அந்த சமூகம் அருள்பாலிக்கபட்ட சமூகமாகவும் மற்றும் ,அல்லாஹ்வின் விருப்புக்கு உட்பட்ட சமூகம் என்றும் விளங்க முடிகிறது இப்படியான ஆட்சி கிலாபத் கோட்பாடுபற்றிய வசனங்கள் கிலாபத்தை மக்களிடம் கொண்டுவருவது இறைவனின் நேரடி பொறுப்பு என்றும் ,ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு இணைவைக்காது நல்லமல்கள் செய்துவரும் மக்களுக்கு அதை பரிசாக கொடுப்பதாக அல் குர்ஆனில் அல்லாஹ்வே வாக்களிதுள்ளமை எடுத்துக்காட்டுகிறது.

இன்றைய சமூகம் அகீதா ரீதியாக ,இஸ்லாத்தின் அடிப்படை விடயத்தின் வேறுபாடு காரணமாக் பிரிந்து உள்ளனர் , ஜாஹிலியா காலத்தில் மக்கள் ,குலம் கோத்திரமாக ,உயர் ஜாதி ,கீழ் ஜாதி என்று பிரிந்துகிடந்த அவர்களை ஒன்று சேர்த்தது அல்குர்ஆன் ,சுன்னாதான் அதைத்தான் அல்லாஹ்வும் சொல்கிறான்.

பிரிந்துகிடந்த சமுதாயத்துக்கு ஒற்றுமை வந்தவிதம் பற்றி அல்லாஹ் அழகாக தெளிவாக சொல்கிறான் பாருங்கள் . அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறு வதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு
(ஆளு இம்ரான் 103-105)

எனவே இஸ்லாமிய உம்மத் அல்குர்ஆன் சுன்னாவின் நிழலில் சங்கமிக்கும்போதே ஒற்றுமை பிறக்கும் .அதன்பிறகு அல்லாஹ் வாக்களித்த கிலாபத் ஒற்றுமையான அந்த சமுதாயத்திற்கு கிடைக்கும் அதை பெற்ற சமூகம்அதை தக்கவைதுகொள்ளும் சக்தியை பெரும் என்பது கிலாபத் கோட்பாட்டில் வாசிக்கபடாத பக்கங்களாகும்.

அஹ்மத்ஷா அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza