Thursday, November 10, 2011

கர்நாடகா:முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு பா.ஜ.கவிலிருந்து நீக்கம்

sriramulu
பெல்லாரி:பெல்லாரி ரூரல் சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மனுத்தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவை பா.ஜ.க கட்சியை விட்டு நீக்கியுள்ளது.

சுரங்கத் தொழில் ஊழல் தொடர்பாக கைதுச் செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜி.ஜனார்த்தன ரெட்டிக்கு நெருக்கமானவரான ஸ்ரீராமுலு இம்மாதம் 30 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். கட்சி சின்னமான தாமரைச் சின்னத்தில் போட்டியிட ஸ்ரீராமுலு மறுத்ததுதான் பா.ஜ.கவை கோபமடையச் செய்தது. ஸ்ரீராமுலு பதவி விலகியதை தொடர்ந்துதான் இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கட்சியின் தீர்மானத்தை மீறியதற்காக ஸ்ரீராமுலுவை நீக்க பா.ஜ.க மாநில தலைவர் ஈஸ்வரப்பா தீர்மானித்தார் என பெங்களூரில் பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“நான் கட்சிக்கு துரோகம் இழைக்கவில்லை. கட்சிக்காக பாடுபட்டு கட்சியை பலப்படுத்தினேன். ஆனால், கட்சி என்னை புறக்கணித்ததால் நான் சுயேட்சையாக போட்டியிட நேர்ந்தது” என மனுத்தாக்கல் செய்த பிறகு ஸ்ரீராமுலு கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza