Sunday, November 13, 2011

ஹுர்ரியத் பேரணியில் தாக்கப்பட்டவர் ராணுவ வீரர் – ராணுவம்

ஸ்ரீநகர்:கஷ்மீரில் தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானியை கொலைச் செய்ய முயற்சி செய்ததாக சந்தேகித்து மக்கள் கூட்டத்தால் தாக்கப்பட்ட நபர் ராணுவ வீரர் என ராணுவம் அறிவித்துள்ளது.

மிலிட்டரி இண்டலிஜன்ஸ் அதிகாரி நாயிக் கமலேஷ் குமார் என்பவர்தாம் தாக்கப்பட்ட நபர் என பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆள் மாறி மக்கள் கூட்டம் கமலேஷ் குமாரை தாக்கியுள்ளனர். ஸோப்பூரில் கிலானி பங்கேற்ற பொது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போராளிகள் எவரேனும் கலந்துக் கொள்கின்றனரா? என்ற தகவலை சேகரிக்கவே மிலிட்டரி இண்டலிஜன்ஸ் குழு நியமிக்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஆனால், கிலானியை கொலைச் செய்ய துப்பாக்கியுடன் வந்த நபரைத்தான் தொண்டர்கள் பிடித்தனர் என ஹூர்ரியத் கூறுகிறது கிலானியை கொலைச் செய்ய அல்லாமல் ஏன் ஒருவர் துப்பாக்கியுடன் பேரணியில் கலந்துக் கொண்டார் என ஹுர்ரியத்தின் செய்தித் தொடர்பாளர் அயாஸ் அக்பர் கேள்வி எழுப்புகிறார். கடுமையாக காயமுற்ற ராணுவ வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுத்தொடர்பாக ராணுவம் வழக்கு பதிவுச்செய்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza