Thursday, November 10, 2011

ரஷ்யா:ஸயீத் நூர்ஸியின் நூல்களை வாசித்ததற்கு சிறைத்தண்டனை

மாஸ்கோ:துருக்கியை சார்ந்த பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் பதியுஸ்ஸமான் ஸய்யித் நூர்ஸியின் பிரபல திருக்குர்ஆன் விரிவுரையான ரிஸாலே நூர் வாசித்ததற்கும், அதனை பாதுகாத்ததற்கும் ரஷ்யாவில் ஒரு நீதிமன்றம் ஆறு முஸ்லிம்களுக்கு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

நூர்ஸியின் ரஷ்ய மொழியிலான நூல்கள் தீவிரவாத செயல்களை தூண்டுகிறது என குற்றம் சாட்டி ரஷ்ய நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. நிஷ்னி நோவகரோத் நீதிமன்றம் ஆறுபேருக்கு தண்டனை வழங்கியது. அவர்கள் நூர்ஸியின் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் குழுவில் உறுப்பினர்கள் என நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

ரஷ்யாவில் பல இடங்களிலும் அமைதியான முறையில் இஸ்லாமிய மார்க்க பணிகளை நடத்துவதை தடுக்க நீதிமன்றங்கள் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza