OurUmmah: மொரோகோவில் அரசியல் கட்சிகளுக்கும் ஆளும் மன்னர் தரப்புக்கும் இடையிலான உடன்பாட்டை அடுத்து ஏற்பட்ட முடிவுகளின் படி நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அதிகாரபூர்வமாக கடந்த 12 ஆம் திகதி ஆரம்பித்துள்ளன. இந்த தேர்தலில் The Justice and Development Party -PJD- நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி என்ற இஸ்லாமிய கட்சி போட்டியிடுகின்றது. இந்த கட்சி நடைபெறப்போகும் தேர்தலில் கூடிய ஆசனங்களைப் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்சி கடந்த 2007 ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அது போட்டியிட அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்று. மொரோகோ பாராளுமன்ற 325 ஆசனங்களில் 46 ஆசனங்களை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தகக்து.
அதேபோன்று கடந்த 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் 42 ஆசனங்களை பெற்றிருந்தது.
கடந்த ஜுலை 01 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் தேர்தல் Referendum on constitutional reforms- இடம்பெற்றது. அதன் பின்னர் அந்நாட்டில் பல அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் பிரகாரமே இத்தேர்தல் இடம்பெறவுள்ளது. The Justice and Development Party நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி தன்னை துருக்கி நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் மாதிரிகளை கொண்ட கட்சி என்று பிரச்சாராப்படுத்தி வருகின்றது.
தற்போதைய பாராளுமன்றத்தில் 395 ஆசனங்கள் உள்ளன. 2007 ஐ விட 70 ஆசனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிதாக சேர்க்கப்பட்ட 70 ஆசனங்களும் பெண்களுக்காகவும், இளைய தலைமுறையினருக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மொரோகோவில் மக்கள் மிகவும் குறைந்த வீதத்தில் வாக்களிப்பில் கலந்து கொள்ளகின்றனர் அதற்கு தேர்தலில் பங்குகொள்ள வேண்டாம் என்று போதிக்கும் சில இஸ்லாமிய அமைப்புகளும் காரணமாக இருப்தாக நம்பப்படுகின்றது. கடந்த தேர்தலில் 37 வீதமானவர்கள் மட்டும் வாக்களிப்பில் பங்கு கொண்டுள்ளனர் ஆனால் இந்த முறை வாக்களிப்பு வீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது மொரோகோ எகிப்து மற்றும் சூடானுக்கு அடுத்தபடியாக பெரும்பான்மையான அரபு முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட மூன்றாவது நாடாகும். அட்லாண்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இந்த நாடு கிழக்கே அல்ஜீரியா, வடக்கே ஸ்பெயின், தெற்கே மவுரித்தேனியா ஆகியன நாடுகளை கொண்டுள்ளது . ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத ஒரேயொரு ஆபிரிக்க நாடு மொரோக்கோ ஆகும்.
மொராக்கோ 32 மில்லியன் மக்கள் தொகையும் , 447,000 சதுர கிலோமீட்டர் பரப்பள கொண்ட நாடாகும். இங்கு சாதாரண உயர் தரம் வரை -15 வயது- கல்வி கட்டாயமாக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. மொராக்கோவின் அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது மொழியாக பிரெஞ்சு உள்ளது.
மொரோகோ மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத்தை கொண்டுள்ள ஒரு அரசியல் சட்டத்தின் கீழ் மன்னர் ஆட்சி நாடாகும். பரந்த நிறைவேற்றும் அதிகாரங்களுடன் உள்ள மொராக்கோ மன்னர் அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு இராணுவ ஆட்சியை நியமிக்கும் அதிகாரமுள்ளவர். எதிர் அரசியல் கட்சிகள் சட்டபூர்வமானவை என்பதோடு அவற்றில் பலவும் சமீபத்திய ஆண்டுகளில் உருவானவையாகும். அதேசமயம் மொராக்கோ பிரதமரே அரசாங்கத்தின் தலைவராகவும், பல கட்சி ஆட்சிமுறையின் தலைவராகவும் இருக்கிறார். நிறைவேற்றும் அதிகாரம் அரசாங்கத்திடம் உள்ளது.
சட்ட அமைப்பு அதிகாரம் அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தின் இரு அவையினரான மொரோகோ பிரதிநிதிகள் சபை மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் சபை ஆகிய இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி மொரோகோவிலும் ஏற்பட்டது எனினும் சில உடன்பாடுகளினால் இன்று மொரோகோ யாப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் ஆகிவற்றை கண்டுவருகின்றது . மொரோகோவின் மன்னர் அதிகாரம் இஸ்லாமிய செயல்பாடுகளை பெருதும் நெருக்கடிக்கு உட்படுத்தவில்லை என்பது மக்கள் மன்னருக்கு எதிராக முழுமயான எழுச்சியில் ஈடுபடாமைகான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.