போபால் நவம்பர்:ஆர்.எஸ்.எஸ் யின் தலைவர்களுள் ஒருவரும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கருதப்பட்டவருமான இந்திரேஷ் குமாரின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள காங்கிரெஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தான் அணைத்து ஹிந்துக்களையும் தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை அடிப்படைவாதிகளை மட்டுமே தாம் குறிப்பிட்டதாகக் கூறியுள்ளார்.
சிங் கூறியதாவது ” நான் எப்போதும் அணைத்து ஹிந்துக்களையும் தீவிரவாதிகள் என்று கூறவில்லை. அதுபோல் அணைத்து முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்றும் சொன்னது இல்லை. ஆனால் அடிப்படை சித்தாந்தங்கள்தான் தீவிரவாதத்திற்கு ஆணிவேர் என்று தாம் எப்போதும் கூறிவந்ததாக தெரிவித்தார்.
மேலும் சங்க பரிவாரர்களின் சித்தாந்தமாக இருக்கட்டும் அல்லது மற்ற தீவிரவாத சித்தாந்தங்களாக இருக்கட்டும் அவை சிறு வயது முதல் வெறுப்புணர்ச்சியையும் வன்முறைச் சிந்தனையையும் பயிற்றுவித்ததனால் மட்டுமே வளர்கிறது என்றும் கூறியுள்ளார்.
நான் சங்க பரிவார கூட்டத்தினை எதிர்த்துதான் தாம் கருத்து தெரிவித்ததாகவும் ஹிந்துக்களுக்கு எதிராக அல்ல என்றும் ஒரு நல்ல ஹிந்து தீவிரவாதியாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.இந்திரேஷ் குமார் முன்னதாக திக்விஜய் சிங் அணைத்து ஹிந்துக்களையும் மற்றும் சாமியார்களையும் தீவிரவாதிகள் என்று கூறி வருகிறார் என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சிங் இந்த மறுப்பை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment