Tuesday, November 15, 2011

யூரோ நெருக்கடி: இந்தியாவை பாதிக்கிறது-பிரணாப் முகர்ஜி

euro
புதுடெல்லி:யூரோ மண்டலத்தின் பொருளாதார நெருக்கடி நாட்டின் வளர்ச்சியை பாதிப்பதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்நிலை நீடித்தால் நாட்டின் ஏற்றுமதித் துறையிலும் நெருக்கடி உருவாகும் என அவர் கூறினார்.

ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடி சந்தைகளில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இது இந்தியாவின் குறுகிய கால வளர்ச்சியின் மதிப்பை எதிர்மறையாக பாதித்துள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க வளர்ச்சியடைந்த நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்தியாவின் ஏற்றுமதித் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வருடம் மிகச்சிறந்த முன்னேற்றத்தை பெற்றுள்ள ஏற்றுமதித் துறைக்கு பாதிப்பு ஏற்படுவது கடுமையான கவலையை ஏற்படுத்தியுள்ளது.

யூரோவுக்கு நெருக்கடி தொடருவது இந்தியாவின் ஏற்றுமதித் துறையை மட்டுமல்ல, பொருளாதார நெருக்கடியிலிருந்து கரை ஏற முயற்சிக்கும் உலக பொருளாதார கட்டமைப்பை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் என பிரணாப் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza