Saturday, November 19, 2011

தமிழகம்:வெற்றிப்பெற்ற எஸ்.டி.பி.ஐ உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டுவிழா மற்றும் வழிகாட்டுதல் முகாம்

sdpi
மதுரை:தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐயின் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழாவும், வழிகாட்டுதல் முகாமும் மதுரையில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐயின் தமிழக தலைவர் ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி தலைமை வகித்தார்.

தமிழ்நாடு தேர்தல் கமிஷனின் பாரபட்ச மனோநிலையையும், முறைகேடுகளை பொருட்படுத்தாமல் 300 இடங்களில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ 62 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளனர். பணத்தின் சக்திதான் இத்தேர்தலில் வெற்றி-தோல்வியை தீர்மானித்துள்ளது. இதர கட்சிகளின் வேட்பாளர்கள் லட்சக்கணக்க்கில் தேர்தலுக்காக செலவழித்துள்ளனர்.ஆனால், மக்களின் நன்மையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் சிறிய தொகையை மட்டுமே செலவழித்து பெரிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளனர் என தெஹ்லான் தனது உரையில் குறிப்பிட்டார்.

விருதுநகரை சார்ந்த மொய்தீன் வழிகாட்டுதல் வகுப்பை நடத்தினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல், தேசிய பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், டாக்டர் ஆவாத் ஷெரீஃப், தமிழக எஸ்.டி.பி.ஐ பொதுச்செயலாளர் எஸ்.எம்.முஹம்மது ரஃபீக் ஆகியோர் உரை நிகழ்த்தினர். எ.அம்ஜத் பாஷா வரவேற்புரை ஆற்றினார்.எஸ்.டி.பி.ஐ தமிழக பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் நன்றியுரை நவின்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza