ரபாத்:சிரியாவில் பல மாதங்களாக தொடரும் அரசு எதிர்ப்பு போராட்டத்தை ராணுவ பலம் பிரயோகித்து அடக்கி ஒடுக்கி வரும் பஸ்ஸாருல் ஆஸாத் அரசுக்கு அரபு லீக் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மூன்று தினங்கள் கால அவகாசத்தை சிரியாவுக்கு அரபுலீக் வழங்கியுள்ளது. அரபு லீக்கின் தீர்மானத்துடன் ஒத்துழைக்காவிட்டால் கடுமையான தடைகளை சிரியா சந்திக்க வேண்டிவரும் என கத்தர் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் ஹமத் பின் ஜாஸிம் அல் தானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிரியா ராணுவத்தின் அடக்கு முறையை தொடர்ந்து அந்நாட்டை அரபு லீக் கூட்டமைப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்திருந்தது. அரபு லீக்கின் நடவடிக்கையை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வரவேற்ற வேளையில் ஈரான் எதிர்ப்பு தெரிவித்தது. இத்தகைய நடவடிக்கைகள் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக அதனை கூர்மையடையச் செய்யும் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரமீன் மெஹ்மான் பெரஸ்த் குற்றம் சாட்டினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment