புதுடெல்லி:கடுமையான பொருளாதார நெருக்கடியில் தள்ளாடுவதாக கூறப்படும் மதுபான அதிபர் விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் விமான நிறுவனத்திற்கு உதவுவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளையும் தேடுவோம் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஆனால், கிங் ஃபிஷருக்கு உதவ விமானப் போக்குவரத்துறை அமைச்சகம் திட்டம் எதையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
கிங் ஃபிஷருக்கு உதவ இந்தியாவுக்கு சென்றவுடன் விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் வயலார் ரவியுடன் விவாதிக்கப்படும் என சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு திரும்பும் வேளையில் விமானத்தில் வைத்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
கிங் ஃபிஷரை காப்பாற்றுமாறு பகிரங்கமாக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார் விஜய் மல்லையா. கடன் நெருக்கடியினால் நேற்று முன் தினம் ரத்துச்செய்த 60 விமானங்கள் உள்பட திங்கள் கிழமை முதல் 250 விமானங்களின் சேவையை கிங் ஃபிஷர் ரத்துச் செய்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment