பீஜிங்:உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட சீனாவில் ஒவ்வொரு தினமும் 10 ஆயிரம் மணமுறிவுகள் நடக்கின்றன. நேற்று முன் தினம் சீனாவின் சிவில் அமைச்சகம் நாட்டின் குடும்ப கட்டமைப்பு தகர்ந்து வருவதற்கான அறிகுறியாக மணவிலக்குகளின் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.
இவ்வருடம் நவம்பர் வரை சீனாவின் பல்வேறு நீதிமன்றங்களில் 28 லட்சம் மணவிலக்கு கோரிய வழக்குகள் பரிசீலனையில் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரத்தின் அடிப்படையில்தான் தினந்தோறும் 10 ஆயிரம் மணவிலக்குகள் சீனாவில் நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. முந்தைய வருடங்களோடு ஒப்பிட்டால் இது 12 சதவீதம் அதிகமாகும்.
சீனாவின் முக்கிய நகரங்களான பீஜிங், ஷாங்காய் ஆகியவற்றில் மண விலக்கின் எண்ணிக்கை சராசரியை விட 30 சதவீதம் அதிகமாகும். நாட்டின் உள்நாட்டு வளர்ச்சி 10 சதவீதம் அதிகமான பொழுதும் குடும்ப கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது புதிய வாழ்க்கை பார்வையாகும் என நேசனல் ஒலிம்பிக் ஹாஸ்பிடலின் மனோதத்துவ நிபுணரான டாக்டர்.க்யூ யங் கூறுகிறார்.
0 கருத்துரைகள்:
Post a Comment