Tuesday, September 20, 2011

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் – பிரதமருக்கு மாயாவதி கடிதம்

images
லக்னோ:உத்திர பிரதேச முதல்வர் மாயாவதி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் தன் கடிதத்தில் கூறியுள்ளதாவது; ‘முஸ்லிம்கள் சமூகத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம் தரவேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். தேவைப்பட்டால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தர சில  கூடுதல் சட்டங்களை அரசு இயற்ற வேண்டும் அதற்கு பஹுஜன் சமாஜ் கட்சி எல்லாவித ஒத்துழைப்பையும் தரும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இட ஒதுக்கீடு குறித்த கடிதத்தில் மாயாவதி சச்சார் கமிட்டியின் பரிந்துரையை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் சச்சார் கமிட்டியின் பரிந்துரைப் படி முஸ்லிம்களின் சமூக நிலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza