மேற்குகரை ஃபலஸ்தீன் தலைவர்கள், ஐ.நா சபையில் பங்கெடுப்பதற்க்காக அமெரிக்காவிற்கு பயணிக்கும் நேரத்தில் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் பாலஸ்தீனின் மேற்குகரை (வெஸ்ட்பேங்க்) என்னுமிடத்தில் உள்ள விளை பயிர் மற்றும் பழ மரங்களை எரித்து நாசப்படுத்தினர்.
ஃபலஸ்தீனிற்கு எதிராக செயல்படும் யூதர்கள் பலர் விவசாய நிலமான பல ஹெக்டேர்களை எரித்தும், ஆலிவ், அத்தி மற்றும் பாதாம் மரங்களை துண்டித்தும் பெரும் அட்டூழியம் செய்துள்ளனர்.
“இது எங்கள் நிலம், இதை ஃபலஸ்தீனர்கள் உருவாக்கவில்லை” என்று இஸ்ரேல் குடிவாசி கிர்யாத் அர்பா என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் இத்ஜர் என்னும் இஸ்ரேல் குடிவாசி உயரமான பகுதியில் நின்று அனைத்து ஃபலஸ்தீனர்களும் கேட்கும்படி தங்களது மந்திரங்களை உரக்க சொல்லியும், ஆறு மீட்டர் நீளமுள்ள மேஜை ஒன்றை உருவாக்கி தங்கள் கொடி வண்ணமான நீலக் கலரில் வண்ணம் பூசப்பட்டு அதில் “ஃபலஸ்தீனின் உரிமை முழுவதும் ஐ.நாவின் கையில்” என்ற வாசகத்துடன் ஃபலஸ்தீனின் முக்கிய நகரமான ரமல்லா என்ற இடத்தில் வைத்து மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.
மேலும் சில ஃபலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கும்போது;’கடந்த மாதமும் இதே போல் 40-க்கும் மேற்ப்பட்ட வன்முறைகள் இஸ்ரேல் குடியேற்றக்காரர்களால் நடத்தப்பட்டது.’ என்றனர்.
மேலும் 1967–ல் அல்-காஸா மற்றும் மேற்கு அல்-குத்ஸ் என்னுமிடங்களை இஸ்ரேல் கைப்பற்றியதை மீண்டும் ஃபலஸ்தீனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஃபலஸ்தீனின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஐ.நா குழுவை வெஸ்ட் பேங்கில் சந்திக்க இருந்தார். இதனால் ஐ.நாவின் உதவி நடவடிக்கையை தடுத்து நிறுத்தவே இவர்கள் இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதாக பாலஸ்தீன் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment