லண்டன்:டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு உள்நாட்டு தீவிரவாத அமைப்பே காரணம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பி.பி.சி தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த ப.சிதம்பரம்; “கடந்த புதன் கிழமை டெல்லி உயர்நீதி மன்றத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு உள்நாட்டு தீவிரவாத அமைப்பே காரணம் என்றும், இதில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எந்தஆதாரமும் இல்லை” என்றும் கூறினார்.
“இந்த குண்டு வெடிப்புக்கு தாங்கள் தான் காரணம் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த அல் கொய்தாவுடன் தொடர்புடைய ஹர்கத்–அல்-ஜிஹாத் அல் இஸ்லாமி மற்றும் இந்தியாவை சேர்ந்த முஜாஹுதீன் என்ற இரண்டு அமைப்புகள் மின்-அஞ்சல் அனுப்பியதை, புலனாய்வுத் துறை ஆய்வு செய்கிறது.
பாகிஸ்தானை சேர்ந்த அந்த அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக கொண்டாலும், அது இந்தியாவில் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபமாக இந்தியாவில்நடந்த மூன்று பெரிய தாக்குதலான புனே, பம்பாய் மற்றும் டெல்லி தாக்குதலை உற்றுநோக்கும்போது புனே மற்றும் பம்பாயில் நடந்த தாக்குதல்கள் இந்தியாவை சேர்ந்தவர்களே செய்ததற்கான அறிகுறி உள்ளது.” என்றும் கூறினார்.
மேலும் அவர்; “பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு அருகாமையில் உள்ளது கவலைத் தரக்கூடிய விஷயமும், மேலும் இந்திய இளைஞர்களை அவர்களின் மூலமாக தீவிரமயமாகுதலிலிருந்து எப்படித் தடுப்பது என்றும் நாம் சிந்திக்க வேண்டும்.
அதற்கு அரசாங்கம் திறமையான துப்பறியும் துறையை, காவல்படையை அமைத்தும் இந்த தீவிர தாக்குதலுக்கு காரணமானோரை தப்பிக்க இயலாது எளிதில் கண்டுபிடிக்க தகுந்த முயற்சி எடுக்கக்கப்படும்.” என்றும் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:
Post a Comment