Sunday, September 18, 2011

பாகிஸ்தானில் கனமழை வெள்ளம்: 10 லட்சம் வீடுகள் சேதம்

pakistan-flood
கராச்சி தெற்கு பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் பருவ மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 45 லட்சம் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.

குலாம் ஜாட் என்ற சிறிய கிராமத்தில் 25 குடிசை வீடுகள் அடித்து செல்லப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இதனால் ரேஷன் முறையில் பொருட்கள் தரப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பாதிப்பு இந்த பகுதியில் ஏற்படுகிறது. இதனால் இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரம் பரிதாபமாகிறது.

கனமழை காரணமாக தலைநகர் கராச்சியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர். அந்த வெள்ளத்தின் போது 2000 பேர் உயிரிழந்தனர். அதே போன்ற பரிதாப நிலை தற்போதும் நிகழ்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza