பெருமளவில் அதிகரித்துள்ள வீடு வாடகை மற்று உணவுப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.அரபு நாடுகளில் தீவிரமடைந்துவரும் எழுச்சிப்போராட்டங்களின் மாதிரியில் டெல் அவீவின் மத்திய பகுதியில் போராட்டக்காரர்கள் முகாமை தயார் செய்துள்ளனர்.இதர சிறு நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.மூன்று லட்சம் பேர் அரசு எதிர்ப்பு கோஷங்களுடன் நேற்று வீதியில் இறங்கியதாக இஸ்ரேலிய பத்திரிகைகள் கூறுகின்றன.தொடர்ச்சியாக 3-வது சனிக்கிழமை போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
அடிப்படை செலவுகளுக்கு போதுமான சம்பளம் வழங்கவேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.இஸ்ரேலில் வசிப்பது மிகவு செலவு கூடியதாகும் என ஜெருசலத்தில் நடந்த பேரணியில் கலந்துகொண்ட 26 வயது மாணவர் யஹுத் ரோத்தம் கூறுகிறார்.இஸ்ரேலியர்கள் ராணுவ-பொதுத்துறை சேவைகள் புரிய நிர்பந்திக்கப்படுவதும், அதிகமான வரியை கட்டும்பொழுதும் போதுமான சம்பளம் கிடைக்காதது அங்கீகரிக்க இயலாது என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:
Post a Comment